கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை நிறுவனமான ஜிமெயிலில் வாசகர்களின் பயன்பாட்டிருக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே இருக்கின்றனர். நமக்கு யாரேனும் ஜிமெயிலில் போட்டோக்கள்(jpg,png,gif), டாகுமென்ட்(doc,xls,ppt) மற்றும் PDF பைல்களை அனுப்பினால் நாம் இந்த பைல்களை நம்முடைய கணினியில் டவுன்லோட் செய்து பின்னர் ஓபன் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் டாக்ஸ்(Google Docs) உதவியுடன் ஆன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நமக்கு வழங்கி உள்ளது. இதனால் நமக்கு டவுன்லோட் செய்யும் நேரம் குறைவதுடன் லிமிட்டட் இணைய இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் நமக்கு அனுப்பப்படும் பைல்களை கம்ப்ரெஸ்(.zip .rar) பைல்களாக இருந்தால் நம்மால் ஆன்லைனில் அந்த பைல்களை பார்க்க முடியாது டவுன்லோட் செய்து தான் பார்க்க முடியும்.
தற்பொழுது கூகுள் இந்த பிரச்சினையை தீர்க்க புதிய வசதியாக .Zip .Rar பைல்களை இனி டவுன்லோட் செய்யாமலே ஆன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியையும் வழங்கி உள்ளது. இதன்படி உங்களுக்கு Rar,zip பைல்களை யாரேனும் அனுப்பினால் அதை ஆன்லைனில் பார்க்க அந்த பைலுக்கு அருகில் உள்ள View என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கு அந்த Zip,rar பைல்களில் உள்ள அனைத்து பைல்களும் காட்டும் அதில் உங்களுக்கு தேவையானதை ஓபன் செய்து பார்த்து கொள்ளலாம்.
உங்களுக்கு அனுப்பிய .Zip,.Rar பைல்களுக்கு உள்ளே இன்னொரு Zip(or)Rar பைல்கள் இருந்தாலும் மேலே படத்தில் காட்டியுள்ளது போல் Actions என்பதை க்ளிக் செய்தால் இன்னொரு சிறிய விண்டோவில் வரும் View கொடுத்தால் அதனையும் பார்த்து கொள்ளலாம் இது போல எத்தனை Rar,Zip பைல்கள் இருந்தாலும் அதனை டவுன்லோட் செய்யாமலே பார்த்து கொள்ளலாம்.
இனி நாம் டவுன்லோட் செய்யாமல் நம்முடைய நேரத்தையும்,பணத்தையும் மிச்ச படுத்துவோம். கூடுதலாக மொபைலில் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த வசதியை அளித்துள்ளனர்.
டுடே லொள்ளு
சும்மா சொல்லகூடாது இந்த மனுஷங்களுக்கு கொஞ்சம் மூளை அதிகம்தாம்பா!! இன்னாமா போகுது ரொம்ப தேங்க்ஸ்பா
Comments