இனி ட்விட்டரிலும் உங்கள் போட்டோக்களை நண்பர்களுடன் பகிரலாம் - புதிய வசதி

சமூக இணைய தளங்கள் இடையேயான போட்டி அதிகரித்துள்ளது. முக்கியமாக பேஸ்புக், கூகுள்+ மற்றும் ட்விட்டர் தளங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. இந்த தளங்கள் வாசகர்களை கவர பல புதிய வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே உள்ளன. இந்த வரிசையில் தற்பொழுது ட்விட்டர் தளத்தில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். பேஸ்புக் மற்றும் கூகுள்+ தளங்களில் உள்ளதை போல இனி த்விட்டரிலும் உங்கள் போட்டோக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 
போட்டோபக்கட் மற்றும் ட்விட்டர் தளங்கள் சேர்ந்து இந்த வசதியை சென்ற மாதமே வெளியிட்டது ஆனால் இப்பொழுது ட்விட்டர் தளம் தனியாக இந்த வசதியை வெளியிட்டு உள்ளது. அதாவது நீங்கள் பகிரும் போட்டோக்களை பார்க்க போட்டோ பக்கெட் தளத்திற்கு செல்ல வேண்டியதில்லை த்விட்டரிலேயே பார்த்து கொள்ளலாம்.

இந்த வசதியை பெற உங்கள் ட்விட்டர் கணக்கில் நுழையும் பொழுதே இந்த புதிய வசதியை பற்றிய உங்களுக்கு ஒரு அறிவிப்பு உங்களுக்கு வரும்.


உங்கள் போட்டோவை மற்றவர்களுடன் பகிர: 
  • நீங்கள் எப்பொழுதும் போல ட்வீட் பாக்சில் கிளிக் செய்யுங்கள். 
  • ட்வீட் பெட்டிக்கு கீழே ஒரு கேமரா போன்ற ஒரு சிறிய ஐகான் காணப்படும் அதில் கிளிக் செய்யுங்கள்.
  • பின்பு ஓபன் ஆகும் விண்டோவில் நீங்கள் மற்றவர்களுடன் பகிர நினைக்கும் போட்டோவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

  • உங்கள் போட்டோவை தேர்ந்தெடுத்த உடன் அந்த படத்தின் Preview உங்களுக்கு தெரியும். 
  • நீங்கள் ஏதேனும் வாசகங்கள் சேர்க்க வேண்டினால் அதை சேர்த்து எப்பொழுதும் போல Tweet பட்டனை அழுத்தினால் உங்கள் போட்டோ நண்பர்கள் அனைவருக்கும் பகிரப்படும். 
  • போட்டோவை பார்க்க விரும்புவோர் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் நண்பர்கள் அந்த போட்டோவை பார்த்து கொள்ளலாம். 
  • நீங்களோ அல்லது மற்றவர்களோ பகின்ர்ஹ்டது போட்டோ என்று கண்டறிய அந்த URL (pic.twitter.com) என இருக்கும் மற்றும் வலது ஓரத்தில் ஒரு சிறிய போட்டோ ஐக்கானும் தெரியும் இதை வைத்து போட்டோ என உறுதி செய்து கொள்ளலாம்.  

Comments