நண்பர்களுடன் சாட்டிங் செய்யும் வசதி பிரபல தளங்களான ஜிமெயில் மற்றும் பேஸ்புக் என இரண்டிலும் உள்ளது. இருந்தாலும் ஜிமெயிலில் நாம் யாருடனாவது சாட்டில் ஈடுபடும் பொழுது இருவருக்கும் இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் ஜிமெயில் Chat History பகுதியில் சேமிக்கப்படும்.இதனால் இதை எப்ப்லுது வேண்டுமானாலும் திறந்து பார்த்து கொள்ளலாம். ஆனால் பேஸ்புக்கில் சேட்டிங் செய்யும் பொழுது நம்முடைய பரிமாற்றங்கள் சேமிக்க படுவதில்லை ஆகையால் இந்த தகவல்களை நாம் திரும்பவும் பார்க்க முடியாது. இது பல வாசகர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. இனி அந்த பிரச்சினை இல்லை பேஸ்புக்கிலும் நம்முடைய Chatting History யை சேமிக்க ஒரு வழி வந்தாச்சு.
- தற்பொழுது பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள் மட்டும் இந்த வசதியை பெற முடியும்.
- இந்த வசதியை பெற இந்த நீட்சியை நம்முடைய பயர்பாக்ஸ் உலவியில் நிறுவி கொள்ள வேண்டும்.
- இந்த நீட்சியை பயர்பாக்ஸ் உலவியில் இணைத்தவுடன் அது மெனுபாரில் சேர்ந்து விடும்.
- அந்த நீட்சியில் கிளிக் செய்து அந்த தளத்தில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.
- அந்த தளத்தில் உறுப்பினர் ஆகிய பிறகு நீங்கள் இனி பேஸ்புக் தளத்தில் யாருடனாவது அரட்டையில் ஈடுபட்டால் உங்களுடைய அரட்டைகள் தானாகவே சேமிக்க படும்.
- இந்த நீட்சியின் மூலம் சேமிக்கப்படும் தகவல்களை CTRL+ALT+F கொடுத்தால் பார்த்து கொள்ளலாம்.
- Chat History தேவையில்லை என்றால் அந்த குறிப்பிட்ட ஹிஸ்டரியை மட்டும் டெலிட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
- Tools - Chat history manager - Export history கொடுத்தால் உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- இனி யாரும் பேஸ்புக் சாட்டில் ஏதாவது சொல்லிவிட்டு பின்பு சொல்லவே இல்லை என்று பொய் கூறினால் அவர்களுக்கு ஆதாரத்துடன் காட்டலாம்.
Comments