பதிவுலகில் திரட்டிகள் என்பது ஒரு முக்கியமான விஷயமாகும். அது ஆங்கிலமாகட்டும், தமிலாகட்டும் வேறு எந்த மொழியாக இருந்தாலும் இந்த திரட்டிகள் முக்கியமான ஒன்றாகும். தமிழ் பதிவுலகம் முழுக்க முழுக்க இந்த திரட்ட்டிகளையே நம்பி உள்ளது. தமிழ் திரட்டிகளில் முக்கியமானது இன்ட்லி,தமிழ்மணம்,தமிழ்10,உலவு,தமிழ்வெளி போன்ற திரட்டிகளாகும். இதில் ஒவ்வொரு தளங்களும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை பெற்று விளங்குகிறது. முக்கிய தளமான இன்ட்லியில் தற்பொழுது சில மாற்றங்களை செய்துள்ளது. அவற்றை இங்கு காண்போம்.
இன்ட்லி என்பது மிகப்பெரிய தளம் அவர்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு முன் பல்வேறு முயற்சிகளையும்,சோதனைகளையும் செய்த பிறகே மாற்றத்தை அனைவருக்கும் அளித்து இருப்பார்கள் என்பது முற்றிலும் உண்மை.
இன்ட்லியில் தற்பொழுது புதிதாக வந்துள்ள பகுதி பரிந்துரை எனப்படும் பகுதி. இந்த பரிந்துரை பகுதியில் கடந்த ஆறுமாதமாக சிறந்த இடுகைகளை எழுதி வரும் சில தளங்களில் இருந்து வெளிவரும் பதிவுகளை மட்டும் இந்த பரிந்துரை பகுதியில் தானாக சேர்ந்து விடும். அந்த தளத்தில் இருந்து வெளிவரும் இடுகைகள் ஒரு ஓட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை நேரடியாக பதிவிட்ட சில நிமிடத்தில் இன்ட்லி பரிந்துரை பகுதிக்கு சென்று விடும். இன்ட்லி பரிந்துரை தளங்களின் முதற்கட்ட லிஸ்டில் உங்கள் தளத்தின் பெயர் உள்ளதா என அறிய இங்கு செல்லுங்கள்.
நன்மைகள்:
- இன்ட்லி தளத்திற்கு வரும் வாசகர்கள் இந்த பரிந்துரை பகுதியில் சிறந்த இடுகைகளை மட்டும் காணலாம்.
- இந்த பரிந்துரை பகுதியில் உங்களுக்கு ஏதேனும் பயனரின் இடுகை பிடிக்க வில்லை எனில் Block செய்யும் வசதியும் உள்ளதால் சிறந்த இடுகைகளை மட்டுமே நீங்கள் கண்டு பயன்பெறலாம்.
தீமைகள்:
- ஆறு லிஸ்டில் ஆறுமாதமாக சிறந்த இடுகைகள் எழுதி வரும் தளங்கள் என்று அறிவித்து விட்டு கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக ஒரு பதிவு கூட எழுதாத தளங்களின் பெயரும் லிஸ்டில் உள்ளது.
இன்ட்லி ஓட்டு பட்டை:
ஒவ்வொரு திரட்டிகளும் அவர்களுக்கென ஒரு ஓட்டு பட்டையை உருவாக்கி அதன் மூலம் குறிப்பிட்ட சில ஓட்டு வாங்கினால் பிரமாலமான இடுகைகள் பகுதிக்கு வந்துவிடும் படி அமைத்து உள்ளனர். ஆனால் இன்ட்லியில் தற்பொழுது செய்த இந்த புதிய மாற்றத்தில் இந்த ஓட்டு பட்டையை இன்ட்லி தளத்தில் தெரியாதவாறு வடிவமைத்துள்ளது. இதன் மூலம் உங்களுக்கு யார் போட்டார்கள் என கண்டறிய முடியாது. இன்ட்லியில் நீங்கள் எந்த தளத்திற்கு சென்று ஒட்டுபட்டனில் அழுத்தி ஓட்டு போடலாம் ஆனால் நீங்கள் ஓட்டு போட்டீர்களா இல்லையா என உங்களால் பார்க்க முடியாது. இன்ட்லியின் இந்த மாற்றம் பாராட்டதக்கதே.
நன்மைகள் :
- ஒரு குழுவாக அமைத்து மாறி மாறி ஓட்டு போட்டு பிரபல இடுகைகள் பகுதிக்கு வரவைக்கும் செயலை முழுமையாக கட்டுபடுத்தலாம்.
- பயனுள்ள இடுகைகள் எழுதினாலும் பிரபல இடுகை பகுதிக்கு வர முடியாமல் கவலை படும் புதிய பதிவர்களுக்கு இனி அந்த கவலை இல்லை ஏனென்றால் இன்ட்லியில் பிரபல இடுகை என்ற பகுதியே தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.
- பிரபல பதிவர்கள் முதல் பதிய பதிவர்கள் வரை அனைவரையும் சமமாகவே மதிப்பிடுகின்றனர். பரிந்துரை தளங்கள் தவிர.
தீமைகள்:
- சிறந்த இடுகை எழுதினாலும் பிரபல இடுகை பகுதிக்கு வராது அப்புறம் ஏன் தேடிபிடிச்சு எழுதணும் எதையோ ஒண்ணு எழுத வேண்டியது தான் என நினைக்கும் பதிவர்களின் எதிர்மறையான மனப்பாங்கு.
- பரிந்துரை லிஸ்ட்டில் இல்லாத பதிவர்கள் எழுதும் சிறந்த பதிவுகளும் பலபேரை சென்றடைய முன்னணி அல்லது சிறந்த இடுகைகள் என்ற ஏதாவது ஒரு பகுதி இருந்தால் பலரை சென்றடைய சுலபமாக இருக்கும்.
இன்ட்லியில் முகப்பு பக்கத்தில் தொடர்பவை பகுதி திறக்கும் படி அமைத்துள்ளனர். இதன் மூலம் வாசகர்கள் அவர்களுக்கு பிடித்த இடுகைகளை தேர்வுசெய்து படித்து கொள்ளலாம் என்ற நல்ல வசதி இருந்தாலும் இன்ட்லி தளத்தில் புதிதாக வரும் வாசகர்களுக்கு No Results என்ற செய்தியே வருகிறது. இதனால் தளத்தில் எதுவுமே இல்லை என்று வாசகர்கள் திரும்பி சென்று விடும் அபாயம் உள்ளது.
முக்கியமாக தேடியந்திரம் மூலம் வரும் வாசகர்களுக்கு No Results என்றால் கண்டிப்பாக இப்படி தான் நினைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே முகப்பு பக்கத்தில் பரிந்துரை பகுதி இருந்தால் வாசகர்கள் சிறந்த இடுகைகளை மட்டும் காணும் வாய்ப்பை உண்டாக்கலாம்.
டிஸ்கி: இந்த பதிவு முற்றிலும் என்சொந்த கருத்துக்களே மாற்றங்கள் குறித்த முடிவு இன்ட்லி நிர்வாகத்தை சேர்ந்ததே.
Comments