முன்பணம் செலுத்தாமல் கூகுளின் புதிய Galaxy Nexus Phone ஆன்லைனில் முன்பதிவு செய்ய

நாளுக்கு நாள் புதுப் புது மொபைல் போன்கள் சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. கையடக்க கணினி என அழைக்க படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் வசதியிலும்,விற்பனையிலும் சிறந்து விளங்குகிறது. ஆப்பிளுக்கு பரம போட்டியாளரான கூகுள் சும்மா இருக்குமா என்ன அதுவும் ஆப்பிளுக்கு போட்டியாக Android எனப்படும் புதிய இயங்குதளத்தை உருவாக்கி போட்டியில் இறங்கி உள்ளது. இப்பொழுது இந்திய மார்க்கெட்டில் ஆப்பிள் போன்களை விட android வகை போன்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. கூகுள் நிறுவனம் மேலும் போட்டியை வலுப்படுத்த புதிதாக சாம்சங் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து Google Nexus என்ற புதிய வகை போன்களை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் பல்வேறு வசதிகள் அடங்கி உள்ளது. அதற்க்கான ஆன்லைன் புக்கிங் சேவையை கூகுள் இந்தியா நிறுவனம் தற்பொழுது தொடங்கி உள்ளது. 




சிறப்பம்சங்கள்:

Android 4.0
இந்த மொபைல் போனில் புதிய வரவான கூகுளின் Android4.0 வகை இயங்குதளம் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. தோற்றம் மிகவும் ஸ்லிம்மாக உருவாக்கப்பட்டுள்ளது.

Face Unlock
இந்த மொபைலில் Face Unlock வசதி உள்ளது. அதாவது இந்த மொபைல் போனை Unlock செய்ய பாஸ்வேர்ட் எதுவும் உபயோகிக்க தேவையில்லை. மொபைல் போனில் உள்ள கேமராவை ஓபன் செய்து அதில் உங்கள் முகத்தை படம் பிடித்தால் போதும் Unlock ஆகிவிடும். திரும்பவும் உங்கள் முகத்தின் நேராக வைத்தால் தான் 
Voice Typing
இந்த போனில் உள்ள இன்னொரு முக்கியமான வசதி Voice Typing. நீங்கள் பேசினாலே போதும்(ஆங்கிலத்தில் மட்டும்) தானாக அது வார்த்தைகளை டைப் செய்து கொள்ளும். 


முன்பதிவு செய்வது எப்படி:

இந்த லிங்கில் கிளிக் செய்து கூகுள் தளத்திற்கு செல்லுங்கள். அங்கு உள்ள Register Now என்ற பட்டனை அழுத்தவும். உங்களை விண்டோவின் கீழே பகுதிக்கு அழைத்து செல்லும் அதில் உங்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து அருகில் உள்ள Register என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் ஈமெயில் ஐடி பதிவு செய்யப்படும்.


விற்பனைக்கு வந்தவுடன் அதற்க்கான அழைப்பை உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள். இந்தவகை போன்கள் அமெரிக்காவில் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படுகிறது. அதன் வரவேற்ப்பை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கையை கூகுள் நிறுவனம் எடுக்க போகிறது. 

Comments