உங்கள் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் எச்சரிக்கை அனுப்பும் தளம்- Earth quake Alert

இந்த டிசம்பர் மாதத்தை யாரும் மறக்க முடியாது. பூகம்பத்தினால் ஏற்ப்பட்ட சுனாமி என்ற அசுர பேரலைகள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்த கொடூர சம்பவம் நடந்தது இந்த மாதத்தில் தான். பூகம்பங்கள் தான் இந்த சுனாமிக்கு காரணம். தினமும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றனவாம். உங்கள் ஏரியாவில் உங்கள் ஊரில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டால் உங்கள் மெயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும் சேவையை ஒரு தளம் வழங்கு கிறது.


ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் உலகம் முழுவதும் பூகம்பம் ஏற்படுவதை கண்காணிக்கிறது. இதனுடைய ட்விட்டர் மற்றும் Rss feed Subscribe செய்து கொண்டால் உலகம் முழுவதும் ஏற்ப்படும் பூகம்பங்களை அறிந்து கொள்ளலாம். மற்றும் பூகம்பத்தை அறிய ஒரு இலவச மென்பொருளும் Quake alert உள்ளது.

உங்கள் பகுதியில் பூகம்ப எச்சரிக்கை தகவல் பெற:
பூகம்பத்தை பற்றிய எச்சரிக்க தகவல் உங்கள் ஈமெயிலுக்கு வர வேண்டுமென்றால் இந்த லிங்கில் Earthquake செய்து அந்த தளத்தில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.

பின்பு உங்களுக்கு இது போன்று ஒரு கூகுள் வரைபடம் வரும் அதில் Create New Region கொடுத்து உங்கள் பகுதியை தேர்வு செய்து கொள்ளவும்.


கீழே உள்ள SAVE CHANGES என்ற பட்டனை அழுத்தி உங்கள் பகுதியை சேமித்து கொண்டால் நீங்கள் தேர்வு செய்த பகுதியில் பூகம்பம் ஏற்ப்பட்டால் எச்சரிக்கை தகவலை அனுப்பும். உங்கள் பகுதி அமெரிக்காவுக்குள் இருந்தால் போகம் ஏற்ப்பட்டு 2-8 நிமிடங்களில் உங்களுக்கு தகவல் அனுப்பிவிடும். வேறு பகுதிகளாக இருந்தால் தகவல் அனுப்ப 20 நிமிடங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

மாதிரி ஈமெயிலை கீழே பார்க்கவும். உங்களுக்கு அனுப்படும் தகவலும் இப்படி தான் இருக்கும்.


இனி இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே உள்ள சமூக தளங்களில் பகிருங்கள். 

Comments