ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகள்

கூகிள் தனது புதிய தளமான கூகுள் பிளசிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு வசதிகளை உருவாக்கி வருகிறது. இப்பொழுது ஜிமெயில் தளத்தில் மேலும் பல புதிய வசதிகளை புகுத்தி உள்ளது. இந்த புதிய வசதிகள் அனைத்தும் கூகுள் பிளஸ் தளத்தை பொறுத்தே அமைந்து உள்ளது. ஜிமெயிலில் இருந்தே உங்கள் வட்டத்தில் புதிய நண்பர்களை சேர்க்கலாம், கூகுள் பிளஸ் வட்டத்தை ஜிமெயில் contacts பகுதியில் பார்த்து கொள்ள மற்றும் ஜிமெயில் கான்டக்ட் ஆட்டோமேடிக் அப்டேட் போன்றவை. இவைகளை பற்றி விரிவாக கீழே பார்ப்போம்.
ஈமெயிலில் இருந்தே புதிய நண்பர்களை வட்டத்தில் சேர்க்க:
உங்களுக்கு மற்றவர்கள் அனுப்பிய மெயிலை படிக்கும் பொழுது அவரை பற்றிய விவரம் வலதுபுறம் இருப்பதை நாம் பார்த்து இருப்போம். இப்பொழுது அதில் கூடுதல் வசதியாக நேரடியாக இங்கிருந்தே அவரை கூகுள் பிளஸ் வட்டத்திற்குள் சேர்க்க Add to Circles என்ற வசதியை கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம் உங்கள் ஈமெயில் நண்பர்களை சுலபமாக கூகுள் பிளசில் தொடரலாம். மற்றும் இதில் அவர் கடைசியாக உங்களுக்கு பகிர்ந்த போஸ்ட்டும் காட்டும்.

ஜிமெயிலில் கூகிள் பிளஸ் Circles:
இப்பொழுது ஜிமெயிலின் labels பகுதியில் Circle என்ற புதிய வசதி இருப்பதை பாருங்கள். அதில் கிளிக் செய்தால் கூகுள் பிளசில் நண்பர்களாக இருப்பவர்கள் உங்களுக்கு அனுப்பிய அனைத்து ஈமெயில்களும் உங்களுக்கு வரும். மற்றும் வட்டத்தில் உள்ள ஒவ்வொரு catagory யாக கிளிக் செய்து பார்த்தல் அதில் உள்ளவர்கள் மட்டும் அனுப்பிய ஈமெயில்கள் உங்கள் தனியே பிரித்து காட்டும்.


Circleக்கு அருகில் உள்ள Arrow லிங்க் கிளிக் செய்தால் உங்களின் category காண முடியும்.

ஜிமெயில் இருந்தே கூகுள் பிளசில் பகிர:
உங்களின் ஈமெயில் உள்ள போட்டோக்களை நேரடியாக கூகுள் பிளசில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 


தொடர்புகள் ஆட்டோமேட்டிக் அப்டேட்:
கூகுள் கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் போன் நம்பர், தொடர்பு முபவரிகள் போன்றவற்றை மாற்றும் பொழுது அவைகள் நமக்கு ஆட்டோமேட்டிக் அப்டேட் ஆகி விடும். ஆதலால் அவர்களை எப்பொழுதும் நம் தொடர்பிலேயே வைத்து கொள்ள உதவுகிறது. 



இப்படி சில புதிய வசதிகளை கூகுள் தளம் உருவாக்கி உள்ளது. 

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Tech Shortly

Comments