இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
இணையத்தில் இருந்து டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்ய உதவும் இலவச மென்பொருள் UTorrent ஆகும். இந்த மென்பொருளின் மூலம் டோரென்ட் பைல்களை வேகமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளில் டவுன்லோட் செய்யும் பொழுது பாதியில் நிறுத்தி பிறகு விட்ட இடத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம், மீடியா பைல்களை டவுன்லோட் செய்யும் பொழுதே பார்க்கலாம். இந்த மென்பொருளின் புதிய பதிப்பு இப்பொழுது வெளியிட்டு உள்ளனர். மென்பொருளை டவுன்லோட் செய்ய - uTorrent 3.1.2



உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாக இப்பொழுது உள்ளது. சமீப காலங்களில் பயர்பாக்ஸ் புதுப்புது வேர்சன்களை வெளியிட்டு கொண்டே உள்ளது. இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை மொசில்லா நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - Mozilla Firefox 10.0.2
இந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து புதிய வசதிகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Comments