மொபைல் போன்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அபரிமிதமாக உள்ளது. உலகிலேயே சீனா தான் மொபைல் போன்கள் உபயோகத்தில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த இரு நாடுகளில் உள்ள அதிகமான மக்கள் தொகையும் இதற்க்கு காரணம் என சொல்லலாம். மொபைல் போன்கள் உபயோகம் உலகில் பெருமாளான நாடுகளில் உள்ளதால் ஒவ்வொரு நாட்டிலும் மொபைல் உபயோகிப்பவர்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.
சில சுவாரஸ்யமான தகவல்கள்:
- ரஷ்யாவில் 154% மொபைல்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் 1.54 என்ற விகிதத்தில் மொபைல் பயன்படுத்து கின்றனர்.
- 53% பேர் இந்தியாவில் மொபைலை தொலைத்து விடுகின்றனர்.
- UK வில் 47% இளைஞர்கள் பாத்ரூமில் மொபைலில் பேசுகின்றனர்.
- ஆஸ்திரேலியாவில் 14.3 மில்லியன் போன்கள் செயலாற்ற நிலையில் உள்ளது. இது நியூசிலாந்தின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு அதிகம்.
- சீனாவில் தான் அதிக பட்சமாக ஒவ்வொரு நாளும் சுமார் 2.7 பில்லியன் எழுத்துக்கள் SMS மூலமாக அனுப்பப்படுகிறது.
மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை பெற somobile வெளியிட்ட புள்ளி விவர படத்தில் பார்க்கவும்.
பதிவுலகத் துக்க நாள் 07.02.2012
கடந்த 31.01.2012 அன்று அதிகாலை இவ் உலகையும், பதிவுலக நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டுப் நம்மை விட்டு பிரிந்த மாயவுலகம் ராஜேஷ் அவர்களின் நினைவாக நாளை( 07.02.2012 )அன்று இந்திய நேரப்படி அதிகாலை 12 மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை பதிவுலகத் துக்க நாளாக அறிவித்து இருப்பதால் நாளை எந்த பதிவும் வந்தேமாதரத்தில் வெளிவராது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
நண்பர்களே நீங்கள் இதை பின்பற்றுங்கள். நண்பரை பிரிந்து வாடும் அவரின் சொந்தங்களுக்கு வந்தேமாதரம் சார்பாக என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
Comments