கூகுள் டிரைவை பயன்படுத்தி PDF, DOC, XLS பைல்களை பிளாக்கரில் தெரிய வைக்க

கூகுளின் சமீப வரவான கூகுல் டிரைவை பற்றி கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம். இன்று
கூகுள் டிரைவ் அளிக்கும் ஒரு பயனுள்ள வசதியை பற்றி காண்போம். பிளாக்கர் வலைபூக்களில்
நேரடியாக PDF பைல்களை அப்லோட் செய்ய முடியாது என்பதால் கூகுள் டிரைவை பயன்படுத்தி எப்படி PDF பைல்களை வலைபூக்களில் தெரிய வைப்படி
எப்படி என காணலாம். 
documents on blogger using drive
  • முதலில் உங்களின் கூகுள் டிரைவ் கணக்கை  ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள UPLOAD பட்டனை அழுத்தி பிளாக்கரில் காட்ட வேண்டிய பைலை அப்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • உங்கள் பைல் அப்லோட் ஆகி முடிந்ததும் கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும். அதில் உள்ள உங்களின் பைல் மீது க்ளிக் செய்யவும். 

  • அப்லோட் செய்த பைல் மீது க்ளிக் செய்தவுடன் அந்த பைல் இன்று விண்டோவில் ஓபன் ஆகும். 
  • அதில் FILE - EMBED என்பதை அடுத்தடுத்து க்ளிக் செய்யவும். 

EMBED என்பதை கொடுத்தவுடன் உங்களுக்கு ஒரு கோடிங்க காட்டும்
அதை முழுவதுமாக காப்பி செய்து கொள்ளுங்கள்.


  • உங்கள் பிளாக்கர் தலத்தில் போஸ்ட் எடிட்டரில் Edit HTML மோடில் பேஸ்ட் செய்யவும்.
  • அடுத்து எப்பொழுதும் போல PUBLISH POST என்ற பட்டனை அழுத்தி போஸ்ட்டை வெளியிடவும். 
இந்த முறையில் நீங்கள் பகிரும் பைலை யாரும் டவுன்லோட் செய்ய கூடாது என்றால்
இந்த பதிவில் (கூகுள் டிரைவில் பகிரும் பைல்களை மற்றவர்கள் டவுன்லோட் செய்ய முடியாமல் தடுக்க) உள்ள வழிமுறையை பயன்படுத்தவும்.


இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து 
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments