கூகுளில் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பார். ஒரே நேரத்தில் அனைத்து கணக்குகளையும் உபயோகிக்க கூகுள் வழங்கி உள்ள வசதி Multiple-sign in வசதி. இதை மேலும் சுலப படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய Multiple Accounts Login page வசதியை அறிமுக படுத்த இருக்கிறது. இனி கூகுள் தளங்களின் நுழைவு பக்கத்தில் பல கூகுள் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். நுழைவு பக்கத்தில் நீங்கள் சேர்த்த அனைத்து கணக்குகளையும் காட்டும் அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்தால் அந்த கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஐடி பாஸ்வேர்ட் தர வேண்டிய அவசியமில்லை.
- இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய முதலில் இந்த பக்கத்திற்கு சென்று அதில் உள்ள enable this feature என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
- லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கு தேவையான மற்ற கூகுள் கணக்குகளை Add account கிளிக் செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு கணக்கில் உள் நுழையும் பொழுதும் Stay signed in என்ற கட்டத்தில் டிக் குறியிடுவது அவசியம்.
- இதே போன்று உங்களின் அனைத்து கூகுள் கணக்குகளையும் சேர்து கொள்ளுங்கள்.
இனி ஒவ்வோரு முறையும் ஈமெயில் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. பொது கணினிகளில் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டாம்.
Thanks
Thanks
Comments