நம்முடைய பிலாக்கரில் Histats Visitor Counter கொண்டு வர

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
...................................................................................................................................
.........................................................................................................................................

     இந்த வசதி நிறைய நண்பர்கள் அறிந்ததே நண்பர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு கேட்டதனால் இதை இங்கு பதிவிடுகிறேன். தெரியாதவர்கள் இதை பார்த்து பயன் படுத்தி பாருங்கள்.

 நம்முடைய தளத்தில் நாமும் தொடர்ந்து  பதிவை எழுதுகிறோம். ஆனால் நம்முடைய தளத்திருக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று அறிய நம்முடைய பிலாக்கரில் இந்த விட்ஜெட்டை சேர்ப்பதனால் நாம் அறியலாம். இந்த விட்ஜெட்டை பெற இந்த தளத்தில் செல்லுங்கள் http://www.histats.com/. உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்


இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆனால் மட்டுமே உங்களால் இந்த விட்ஜெட்டை பெறமுடியும். Register என்பதை க்ளிக் செய்து இந்த தளத்தில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகிய பிறகு உங்களுடைய mail, password கொடுத்து நுழைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


இதில் காட்டியுள்ளதை போல Add a website என்ற பட்டனை கொடுத்து உங்களுடைய பிலாக்கினை சேர்த்து கொள்ளுங்கள்.  உங்களுடைய தளம் அதில் பதிந்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் 

உங்கள் தளத்தை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
 

இதில் Counter code என்பதை க்ளிக் செய்யுங்கள். வரும் விண்டோவில் add new counter என்பதை க்ளிக் செய்யுங்கள்   
   
உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் 


இதில் சுமார் 500க்கும் அதிகமான visiter counter விட்ஜெட்டை கொடுத்துள்ளார்கள் இதில் உங்களுக்கு தேவையான counter செலக்ட் செய்து விட்டு உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து விட்டு Save என்ற பட்டனை அழுத்திவிடுங்கள்.   உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் 


இதில் நான் வட்டமிட்டுள்ளது நீங்கள் செலக்ட் செய்த Counter Id இதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

 
உங்களுக்கு நீங்கள் செலக்ட் செய்த விட்ஜெட்டின் Html code காப்பி செய்து உங்கள் தளத்தில் DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT சென்று பேஸ்ட் செய்யவும் .  அவ்வளவு தான் உங்கள் தளத்தில் Histats Visitor Counter Widget வந்திருக்கும்.

பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும். பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லுங்கள்.

டுடே லொள்ளு    
Photobucket
யாராவது கூட வர்றீங்களா ஜாலியா ஒரு ரவுண்டு போகலாம்.

நண்பரே ஓட்டு போட்டு அனைவரும் பயன்பெற உதவுங்கள். 

Comments