நாம் தினமும் விதவிதமான பதிவு போடுகிறோம், ஏதேனும் இடத்தினை பற்றி போடும் போது நாம் இந்த கூகுள் Maps நம் பதிவில் போட நினைப்போம், ஆனால் இந்த கூகுள் Maps Link நம்முடைய சைடுபாரில் நன்றாக வருகிறது ஆனால் அது நம் பதிவில் வராது. காரணம் அந்த கோட் Iframe வடிவில் இருப்பதனால் தான் அதை எப்படி Script வடிவில் மாற்றி நம் பதிவில் கொண்டுவருவது என்பதை தான் கீழே பார்க்க போகிறோம்.
- இதற்க்கு முதலில் நீங்கள் Google Maps தளத்திற்கு செல்லவும்.
- சென்று அங்கு உங்களுக்கு தேவையான இடத்தின் வரைபடத்தை கொண்டு வந்தவுடன் வரைபடத்தின் வலது பக்கத்தின் மேல் மூலையில் உள்ள Link என்ற பட்டனை அழுத்தவும்.
- வரும் கோடிங்கில் Html to Embeded into website உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
- இந்த கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். இதனை நாம் தற்போது Script வடிவில் கொண்டு வரவேண்டும்.
- அதற்கு இந்த Convert Code லிங்கில் செல்லுங்கள். சென்று அங்கு இருக்கும் காலி கட்டத்தில் நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
- பேஸ்ட் செய்ததும் கீழே உள்ள Convert என்ற பட்டனை அழுத்தவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
பட்டனை அழுத்தியதும் நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங் மறைந்து ஒரே வரியில் ஆன கோடிங் கிடைக்கும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
இந்த கோடினை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் போஸ்ட் எடிட்டர் பகுதியில் உள்ள Edit HTML பகுதில் பேஸ்ட் செய்து விட்டு உங்கள் பதிவை பப்ளிஷ் செய்தால் போதும் நீங்கள் விரும்பிய கூகுள் வரைபடம் உங்கள் பதிவில் வந்து விடும்.
இனி நீங்கள் உங்களுக்கு தேவை ஏற்ப்படும் போது உங்கள் பதிவில் சேர்த்து கொள்ளுங்கள்.
டுடே லொள்ளு
Left,Right Left Right என்னங்க பார்க்கறீங்க White Cat போலிஸ் குருப்ல ஆளு எடுக்கறாங்களாம் அதான்
Comments