Feed Burner மெயிலில் உங்கள் பிளாக்கின் லோகோவை இணைக்க

பிளாக் வைத்திருக்கும் அனைவரும் Feedburner பற்றி அறிந்து இருப்போம். நம்முடைய தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் பதிவை அவர்களின் ஈமெயிலில் பெற இந்த வசதி பயன்படுகிறது.  ஆனால் இதன் மூலம் அனுப்படும் மெயிலில் எப்படி நம்முடைய பிளாக்கின் லோகோவை சேர்ப்பது என்று இங்கு பார்ப்போம்.  இது போல் மாற்றினால் நம்முடைய மெயில் நம் தளத்தின் லோகோவோடு வாசகர்களுக்கு செல்லும். .
மேலேயுள்ள படத்தில் இருப்பது போன்று எப்படி உங்கள் பிளாக்கின் லோகோவை இதில் வரவைப்பது என்று பார்க்கலாம்.
  • முதலில் உங்களின் Feedburner அகௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Publicize - Email Subscription - Email branding பகுதிக்கு சொல்லுங்கள்.  உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் நான் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் உங்கள் லோகோவுக்கான URL கொடுக்கவும்.
  • நீங்கள் URL கொடுத்தவுடன் உங்கள் மெயிலின் மாதிரியில் நீங்கள் கொடுத்த லோகோ வந்திருக்கும். 
  • மற்றும் அதற்க்கு கீழே சில வசதிகள் இருக்கும் அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி கொள்ளுங்கள்.
  • வேண்டிய மாற்றங்கள் செய்த பின்னர் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுடைய மாற்றங்கள் சேமிக்க பட்டு விடும். 
  • இனி உங்கள் Subscriber அனைவருக்கும் உங்கள் தளத்தின் லோகோவோடு மெயில் செல்லும். 
டுடே லொள்ளு 
சீன்றவன் எவன்னு தெரிஞ்சது நான் மனுஷனாவே சாரி குரங்காவே இருக்க மாட்டேன்.


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

Comments