1) OFFLINE:
இந்த வசதி மிகவும் பயனுள்ள வசதி. நம் கணினியில் இணைய இணைப்பு இல்லாத போதும் நமக்கு வந்து இருக்கும் புதிய மெயில்களை இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம் பெற்று கொள்ளலாம்.
SETTINGS- OFFLINE - க்ளிக் செய்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆனால் ஜிமெயிலில் MULTIPLE SIGNIN ஆக்டிவேட் செய்து இருந்தால் இவ்வசதியை பெற முடியாது. https://www.google.com/accounts/b/0/MultipleSessions இந்த லிங்கில் சென்று MULTIPLE SIGN IN வசதியை செயலியக்க செய்துவிட்டு இதனை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
2. PICTURE IN CHAT
2. PICTURE IN CHAT
நாம் ஜிமெயில் நம் நண்பர்களுடன் இலவசமாக அரட்டை அடித்து கொள்வோம். அப்படி அரட்டையில் இருக்கும் போது நாம் ஏதேனும் செய்தி அனுப்பினால் நம்முடைய படம் தெரிவதற்கு இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விடுங்கள். இதற்க்கு SETTINGS- LABS- PICTURE IN CHAT - ENABLE -SAVE CHANGES.
3. UNDO SEND
நாம் அவசர அவசரமாக ஏதேனும் தவறான மெயிலோ அல்லது முகவரி மாற்றியோ மெயில் அனுப்பிவிட்டால் அதை போகாமல் தடுக்க இந்த வசதி பயன் படுகிறது. இதற்க்கு SETTINGS- LABS - UNDO SEND - ENABLE - SAVE CHANGES- க்ளிக் செய்து இதை ஆக்டிவேட் செய்தவுடன் மறுபடியும் GENERAL க்ளிக் செய்து உங்களின் நேர அனுப்பிய மெயிலை தடுக்கும் நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
4. RIGHT CHAT
நம்முடைய ஜிமெயிலில் உள்ள சட பகுதியை இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு கொண்டு வர இந்த வசதியை செயல் படுத்தி கொள்ளுங்கள். இதற்க்கு SETTINGS - LABS - RIGHT-SIDE CHAT - ENABLE - SAVE CHANGES.
5. SIGNATURE
ஜிமெயிலில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலின் கீழே நீங்கள் உங்களுடைய பெயரை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வசதியை செயல் படுத்தி விட்டாலே போதும் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலின் கீழே உங்களுடைய பெயர் வந்து விடும்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |
Comments