Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

சுலபமாக வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் பிரபலமான தளங்கள் youtube, Daily motion, Metacafe போன்ற தளங்கள் ஆகும். இந்த வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது என்று நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இதற்கு ஒரு இணைய தளம் உள்ளது இதில் நம் கணினியில் சேமிக்க பட்டிருக்கும் வீடியோவில் இருந்து கூட ஆடியோவை பிரித்தெடுத்து கொள்ளலாம்.
  • இந்த வேலையை நமக்கு சுலமாக செய்ய இந்த தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த லிங்கில் Audio from Vedio க்ளிக் செய்யவும். கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • மேலே உள்ள கட்டத்தில் உங்களின் வீடியோவின் URL கொடுக்கவும்.
  • I accept க்ளிக் செய்து அடுத்துள்ள Next என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • சிறிது நேரம் காத்திருக்கவும்.உங்களுடைய வீடியோ கன்வெர்ட் ஆகி mp3 பைலாக உங்கள் கணினியில் சேமிக்க படும். 
  • மேற்கூறிய முறையில் இணையத்தில் உள்ள வீடியோக்களில் இருந்து ஆடியோவை பிரித்தெடுக்கும் முறை.
  •  ஆனால் நம் கணினியில் உள்ள வீடியோவில் இருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இந்த தளத்தில் சென்று அருகில் உள்ள Convert by Upload என்ற பட்டனை அழுத்தி உங்கள் வீடியோவை தேர்ந்தெடுத்து Next பட்டனை அழுத்திவிடவும்.
  • மேலே படத்தில் உள்ளது போல் நீங்கள் செய்து உங்கள் கணினியில் சேமித்திருக்கும் வீடியோவில் இருந்த ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்கலாம்.
டுடே லொள்ளு 
Photobucket
யாருப்பா அது தூங்கும் போது கதவ தட்றது போயிட்டு அப்புறம் வாங்க.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

  1. வழக்கம்போலவே பயனுள்ள தகவல்

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. யானை லொள்ளு அருமை:)!

    ReplyDelete
  3. சசி அண்ணா! சூப்பராக கூறினீர்கள்!
    //யாருப்பா அது தூங்கும் போது கதவ தட்றது போயிட்டு அப்புறம் வாங்க.// ஐயோ ரொம்பத்தான் தூங்குறாரு எழுப்பி விடுங்க!
    வழங்கியவர் jiyathahamed.blogspot.com

    ReplyDelete
  4. முன்பே FETCH mp3 எனும் தளம் குறித்து சொல்லி, இதே மாதிரி வீடியோ பாடல்களை ஆடியோவுக்கு மாற்றும் விதம் சொல்லி இருந்தீர்கள். நன்றி. இதையும் முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  5. எப்பொழுதும் போல் உங்களின் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கு...

    உங்கள் தளம் வரும் பொழுதே...நிச்சயம் ஒரு புதுவிஷயம் தெரிந்துக்கொள்கிறோம்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மிக்க நன்றி நண்பா இணைய உலகின் பிரபலமாக தங்களின் ஒவ்வொரு பதிவும் அமைவதைக்கண்டு களிப்பில் வார்த்தை வருவதில்லை

    வளமைபோல் ஆசானாய் கற்றுத்தரும் பதிவுக்காக மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல் உங்கள் இந்த நல்ல சேவைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல் சசி

    ReplyDelete
  9. தகவலுக்கு மிக்க நன்றி சகோதரம்...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press