Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் குரோமில் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க- Vanilla Extensions

இணைய உலவிகளில் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்த கூகுள் குரோம் வெகு சீக்கிரம் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் வேகமும் எளிமையும் அனைவரையும் கவர்கிறது. இந்த உலவி மட்டுமல்லாது எல்லாம் உலவியிலும் உள்ள பிரச்சினை Cookies ஆகும். குக்கீஸ் என்பது நம் இணைய சர்வர்களால் உருவாக்க படும் ஒரு சிறிய அப்ளிகேசன் ஆகும். ஏற்கெனவே திறந்த இணைய பக்கத்தை மறுபடியும் திறக்கும் போது அந்த தகவல்களை தானே புகுத்தி கொள்ள இவைகள் பயன் படுகின்றான். எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அதை விட இருமடங்கு ஆபத்துக்கள் உள்ளது.
இணைய தளங்களில் உலாவும் போது இந்த Cookies கள் நமக்கு தெரியாமலேயே நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. புகுந்து கொண்டு நம் உலவியில் சேமிக்க பட்டிருக்கும் நம்மை பற்றிய தகவல்களை அனைவருக்கும் அனுப்பி விடுகின்றன. இதில் நம்முடைய ரகசிய வங்கி கணக்கு எண்களும், பாஸ்வேர்ட் களும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. ஆகவே இதில் இருந்து நாம் கவனமாக இருக்க ஒரு வழி உள்ளது. 

இந்த குக்கீஸ்களை அடிக்கடி நீக்கி கொண்டே இருக்க வேண்டும். எனக்கு மறந்து விடும், என் வேலைகளுக்கு இடையில் எனக்கு செய்ய நேரமிருக்காது என்று கூறுகிறீர்களா. கவலையை விடுங்கள் உங்களுக்காக ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது இந்த லிங்கில் Vanilla சென்று இந்த நீட்சியை நிறுவி கொள்ளுங்கள்.

 • Show Options கிளிக் செய்தவுடன் கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
 • இதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் உங்கள் உலவி ஞாபகம் வைத்து கொள்ளவேண்டிய தளங்களை சேர்த்து கொள்ளலாம். 
 • கீழே உள்ள Auto delete என்ற கட்டத்தில் டிக் குறியிட்டு பக்கத்தை மூடிவிட்டால் போதும் இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் உங்கள் கணினியில் Cookies அழிக்க படும்.
 • இனி நீங்கள் உங்களுக்கு தேவையான இணைய பக்கங்களை மட்டும் White listil ல் சேர்த்து விடுங்கள். 
 • Auto delete ஆகும் போது இந்த Whitelist ல் உள்ள cookies அழிக்க படாது மற்றவைகள் அழிக்க பட்டு விடும். 
 • Clear Unwandted Cookies என்று கொடுத்தால் நம்முடைய கணினியில் இதற்கு முன்னர் உள்ள அனைத்து  குக்கீஸ்களும் ஒரே நொடியில் அழிக்கப்பட்டு விடும்.
 • நான் Whitelist ல் இரண்டு தளங்களை சேர்த்து இருப்பதால் அந்த இரண்டு குக்கீஸ்களும் அழிக்க படவில்லை. 
 • இனி நீங்கள் பாதுகாப்பாக கூகுள் குரோமில் இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.
டுடே லொள்ளு 


இவ்ளோ தண்ணி இருக்கே அழகா ஒரு சொம்பு  எடுத்து குளிக்கரத விட்டுட்டு எதுக்குடா உனக்கு இந்த ஆசையெல்லாம்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

16 comments :

 1. Useful information Sasi

  டுடே லொள்ளு :(((

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. .நானே, அரைமணிரேத்துக்கு ஒருமுறை, அழித்து கொண்டு இருந்தேன் !

  .இனி அந்த வேலை, எனக்கு இல்லை என்பதில் சந்தோசம் !

  .பகின்றமைக்கு நன்றி, தோழரே !

  ReplyDelete
 4. நல்ல பதிவு நண்பா

  வலைப்பதிவின் வார்ப்புருவை அழகாக வடிவமைத்துள்ளீர்கள்!

  அருமை!

  500க்கும் மேற்பட்ட பின்தொடர்வோரைப் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி பாராட்ட்ட்ட்ட்ட்டுக்க்க்க்க்கள்!!!!

  தங்களைப் போன்றோரின் வளர்ச்சியை
  இணையத்தமிழ்நுட்பத்தின் வளர்ச்சி என்றே நான் கருதுகிறேன்..

  ReplyDelete
 5. நண்பரே எனக்கு என்னவோ முன்பு இருந்த நிறம்தான் அழகாக இருந்தது போல் இருந்தது மன்னிக்கவும் முடிந்தால் அந்த நிறத்தியே வையுங்கள் பார்ப்பவர்கள் தவறாக புரிந்துகொண்டாலும் பரவாயில்லை நமக்குள் ஏதோ ஒற்றுமை என்று நினைத்துக்கொள்ளட்டும். நன்றி

  ReplyDelete
 6. நல்ல பதிவு நண்பா

  ReplyDelete
 7. Very useful post...Thanks for sharing..

  ReplyDelete
 8. நல்ல தகவல் சகோதரம்...

  ReplyDelete
 9. டெம்ளேட் எல்லாம் வித்தியசமாக் கலக்கிறிங்க... நல்லாயிருக்க எங்கே fevicon காணல..

  ReplyDelete
 10. சசி , பழைய டெம்ப்ளட் தான் சூப்பர்.

  ReplyDelete
 11. பயனுள்ள தகவல்...

  தயவு செய்து என்னக்கு போன் செய்யாதிங்க .....! ப்ளீஸ் .....
  http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete
 12. பயனுள்ள பதிவு,பகிர்வுக்கு நன்றி!!

  ReplyDelete
 13. எனக்கு ஒரு உதவி வேண்டும் என்னுடைய கூகிள் குரோமில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வெப் சைட்களை
  உபயோகத்தில் வைத்து இருக்கும் போது மேலே உள்ள tap ஐ கிளிக் செய்தால் அந்த tab close ஆகிவிடுகிறது இதை எப்படி சரி செய்யலாம்

  ReplyDelete
 14. உங்களோடது எல்லா பதிவும் உபயோகமானது தான்,மிக்க நன்றி.தொடருங்கள் உங்கள் சேவையை.

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press