பேஸ்புக்கில் குறிப்பிட்ட நண்பர்களின் புகைப்படத்தை மட்டும் எப்பொழுதும் முதலில் காட்ட

 பேஸ்புக் வளர்ச்சியை பார்த்து வியப்படைந்து கொண்டிருக்கிறது இன்றைய உலகம். சமூக தளமான பேஸ்புக் நம் நண்பர்கள் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம்முடைய செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாலமாக அமைந்து உள்ளது. நாம் பேஸ்புக்கில் ஒவ்வொருமுறை செல்லும் போதும் நண்பர்கள் பகுதியில் வேறுவேறு படங்களை காட்டும்.  
இது உங்களுக்கு பிடிக்கவில்லை பேஸ்புக்கில் எப்போதும் குறிப்பிட்ட நபர்களின் படங்கள் தான் தெரிய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதற்க்கும் பேஸ்புக்கில் ஒரு வசதி உள்ளது.
  • முதலில் உங்கள் பேஸ்புக் www.facebook.com அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அங்கு உங்கள் நண்பர்களின் படங்கள் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு ஒரு சிறிய பென்சில் போன்ற லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • அங்கு காலியாக உள்ள கட்டத்தில் உங்களுக்கு தெரியவேண்டிய நண்பர்களின் பெயரை டைப் செய்யவும். 
  • நீங்கள் முதல் எழுத்தை டைப் செய்தவுடன் அந்த எழுத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காட்டும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளவும்.
  • இது போல நீங்கள் தேர்வு செய்யும் பெயரும் இதில் சேர்ந்து கொண்டே வரும். 
  • இது போல உங்களுக்கு தேவையானவர்களை நீங்கள் தேர்வு செய்ததும் அவர்களின் படங்கள் வரிசையாக காண்பிக்கப்படும். 
  • இனி எப்பொழுது உங்கள் பக்கத்தை திறந்தாலும் நீங்கள் தேர்வு செய்தவர்களின் புகைப்படங்கள் தான் முதலில் வரும்.
இன்னொரு வசதி: படங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் 
சாதரணமாக நம் பெஸ்புக்கின் நண்பர்கள் பகுதியில் ஆறு படங்கள் மட்டுமேதெரியும் அதை மாற்றி 12 படங்கள் தெரியவைக்கலாம்.
  • அதில் இருக்கும் 6 என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் அதிக பட்சம் 12 படங்கள் வரை பொருத்தி கொள்ளலாம்.
    டுடே லொள்ளு 
    இன்னாவோ சொல்ல வருது ஆனா முடியல பாவம் ஆண்டவன் இந்த பொண்ணுக்கு பேச்சை கொடுக்க வில்லையே என்ன பண்றது. 
    நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.  

    Comments