நம்முடைய கணினியில் பெரிய பைல்களை சேமித்து வைத்து இருப்போம். இந்த பைல்களை மெயில் அனுப்பவும் நம் கணினியில் கையாளவும் மிகவும் சிரமமாக இருக்கும். இந்த பெரிய பைல்களை எப்படி சிறு சிறு பைல்களாக பிரித்து மீண்டும் ஒட்ட அஒரு இலவச மென்பொருள் பயன் படுகிறது.
- இந்த மென்பொருளை கீழே உள்ள டௌன்லோட் பட்டனை அழுத்தி பெற்று உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
- இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை.
- Exe பைலை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- முதலில் உள்ள கட்டத்தில் உங்களின் பெரிய பைலை தேர்வு செய்து கொள்ளவும்.
- அடுத்து இரண்டாவது கட்டத்தில் உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
- Split into என்ற கட்டத்தில் உங்களுடைய பைல் எத்தனை பகுதிகளாக வேண்டும் என்று குறிப்பிடவும்.
- அடுத்து கீழே உள்ள Split என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பெரிய பைல் அடுத்த வினாடியே சிறு சிறு பைல்களாக நீங்கள் கொடுத்த எண்ணிக்கையில் வரும்.
- இப்பொழுது இந்த பைல்களை நீங்கள் மெயிலில் சுலபமாக அனுப்பிவிடலாம்.
- திரும்பவும் இந்த பைல்களை ஒரே பைலாக ஆக்க நினைத்தால் மறுபடியும் இந்த மென்பொருளை திறந்து JOINING என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் பிரித்த பைலை தேர்வு செய்து JOIN என கொடுத்தால் அந்த பைல் திரும்பவும் ஒரே பைலாக மாறி விடும்.
டுடே லொள்ளு
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments