நாம் நம்முடைய பிளாக்கில் கூகுள் ஆட்சென்ஸ் அல்லது இது கிடைக்காதவர்கள் Admaya விளம்பர பேனர்கள் பொருத்தி உள்ளோம். (அட்சென்ஸ் கிடைக்காதவர்கள் Admaya தளத்தின் விளம்பரத்தை எப்படி பெறுவது என்பதை முந்தைய பதிவை பார்த்து சேர்த்து கொள்ளவும்).
இந்த விளம்பரங்களை நாம் சைடு பாரிலும் அல்லது தலைப்பிற்கு மேலேயும் சேர்த்து இருப்போம். ஆனால் பதிவிற்கு இடையில் உங்கள் விளம்பர பேனர்களை வைத்தால் உங்கள் விளம்பரங்கள் க்ளிக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே ஆங்கில தளங்கள் அனைத்திலும் இந்த விளம்பர பேனர்கள் பதிவுகளுக்கு இடையில் வைத்து இருப்பார்கள். ஆக நம் பிளாக்குகளிலும் எப்படி விளம்பர பேனர்களை பதிவுகளுக்கு இடையில் கொண்டுவருவது என பார்ப்போம்.

- முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். Dassboard - Design - Edit HTML - Expand Widget Template பகுதிக்கு செல்லுங்கள்.
- சென்று கீழே உள்ள கோடிங்கை உங்கள் பிளாக்கில் கண்டு பிடிக்கவும்(Ctrl + F கொடுத்து கீழே உள்ள கோடிங்கை டைப் செய்தால் இதை ஈசியாக கண்டறியலாம்.)
<data:post.body/>
- இந்த கோடிங்கை கண்டு பிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டு பிடித்த கோடிங்கிருக்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.
<div style='float:left; margin-left:5px;'></div>
- இந்த கோடிங்கில் சிவப்பு நிறத்தில் இருப்பதை உங்களுக்கு தேவையென்றால் Right என்று கொடுத்து பேனர் தெரியும் இடத்தை மாற்றி கொள்ளலாம்.
- இப்பொழுது இந்த இரண்டு வரிகளுக்கு இடையில் உங்களுடைய விளம்பர கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
- அவ்வளவு தான் இப்பொழுது கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தினை சேமித்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் பதிவிற்கான பக்கத்தை திறந்து பாருங்கள். எந்த பதிவாக இருந்தாலும் பரவாயில்லை.
- இந்த விளம்பர பேனர் உங்கள் பதிவிற்கு இடையில் இருப்பதை காண்பீர்கள்.
டுடே லொள்ளு
இந்த மனுசங்க நெலம ரொம்ப கேவலமா போச்சோ எங்க கிட்ட இருந்து கூட பிடுங்க ஆரம்பிச்சிடாங்க என்ன கொடும சார் இது.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments