Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கணினிக்கு அழகிய 500 எழுத்துருக்கள்(Fonts) ஒரே மென்பொருளில் இலவசமாக

கணினிக்கு இயங்குதளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம் இந்த எழுத்துருக்கள். கணினியில் எழுத்துருக்கள் இல்லாமல் கணினி இருப்பதால் எந்த பயனும் இல்லை. அதனாலே இயங்கு தளம் நிறுவும் போதே சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்கள் கணினியில் நிரந்தரமாகவே இருக்கும். ஆனால் டீபால்டாக வரும் எழுத்துருக்கள் மிகவும் குறைவே மற்றும் அதில் போட்டோசாப் டிசைன் போன்றவைகள் செய்ய இந்த வகை பல அழகிய எழுத்துருக்கள் இருந்தால் தான் நாம் வடிவமைக்கும் டிசைன் அழகாக காணப்படும். வேர்ட் தொகுப்பில் ஏதாவது டிசைன் செய்தாலும் விதவிதமான பாண்ட்கள் இருந்தால் அழகாக காணப்படும்.

அழகிய எழுத்துருக்கள் இணையத்தில் இலவசமாக கிடைத்தாலும்  அவைகளை ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்து நம் கணினியில் இணைக்கவேண்டும் ஆனால் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து விட்டால் சுமார் 500 பான்ட் வடிவங்கள் உங்கள் கணினியில் சேர்ந்து விடும். இந்த மென்பொருளில் ஏராளமான அழகிய எழுத்துருக்கள் அடங்கி உள்ளன. 

  • இந்த மென்பொருள் முற்றிலும் இலவச மென்பொருளாகும். 
  • இந்த மென்பொருள் வெறும் 11MB அளவே கொண்டுள்ளது.
  • XP/2003/2008/Vista/Win7 போன்ற இயங்கு தளங்களில் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஒருமுறை இன்ஸ்டால் செய்து விட்டாலே போதும் திரும்பவும் இதை இயக்க வேண்டிய அவசியமில்லை.
  • இந்த JD True Type Fonts மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும். 
டுடே லொள்ளு

காங்கிரஸ்:  திமுகவும் சிபிஐயும் இப்படி ஒரே பிடியா இருந்தா நாங்க என்னடா பண்றது. (அவங்களே கூட்டணியில் இருந்து விலகுவாங்கன்னு பார்த்தாலும் ஒண்ணுமே பேச மாட்டேங்கிறாங்களே)    

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

22 comments :

  1. நண்பா வழக்கம்போல அசத்தல் பதிவு! ஆமா நம்ம ப்ளாக் ல விரும்பின மாதிரி எழுத்துக்களை மாத்த முடியுமா?

    ReplyDelete
  2. சூப்பர்! பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.



    Share

    ReplyDelete
  4. பகிர்வுக்கு மிக்க நன்றி! சசி!

    ReplyDelete
  5. எழுத்துரு என்பது கணணிகள் பாவிக்கும் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்
    அவ் எழுத்துருக்கள் யாவற்றையும் ஒரேயொரு மென்பொருள் ஊடாக தொகுத்து வழங்கி இருப்பது அருமையான ஒன்று.

    ReplyDelete
  6. புதுமையான -அருமையான தகவல் !நன்றி !

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்..நன்றி சசிகுமார்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவலுக்கு நன்றி சசி

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு. நன்றி. புகைப்படங்களுக்கு உள்ளே தமிழில் எழுத ஒரு எளிதான எழுத்துரு, வழி சொல்லுங்களேன்:)!

    ReplyDelete
  11. மீண்டும் ஒரு பயனுள்ள தகவல் பாஸ்நன்றி

    ReplyDelete
  12. தேவையான ஒரு பயனுள்ள பதிவு..
    பதிவிற்கு நன்றிகள்...

    ReplyDelete
  13. sasi நன்றி.. விசாரிப்புக்கும் சேர்த்து

    ReplyDelete
  14. மிக்க நன்றி நண்பரே...

    எனக்கு மிகவும் பயனுள்ளதான இருக்கிறது...

    ReplyDelete
  15. எல்லா எழுத்துருக்களையும் ஒரே மென் பொருளில் தந்திருக்கிறீங்க. ரொம்ப நன்றிகள் சகோ.

    ReplyDelete
  16. மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி நண்பா

    ReplyDelete
  17. சகோ: சசி .....வழக்கம்போல் மிகவும் பயனுள்ள இடுகை மிக்க நன்றி ........

    ReplyDelete
  18. Download Page Error

    Download Page Error
    Download Page Error

    Download Page Error 500

    ReplyDelete
  19. Pls Update the Page Or Remove This Post

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press