Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பவர்பாய்ன்ட்(.ppt) பைல்களை வீடியோவாக கன்வெர்ட் செய்ய

கணினி துறையில் புகழ்பெற்று விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீடு இந்த பவர்பாய்ன்ட் மென்பொருள். இந்த பவர்பாயின்டில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்கி அதை மொத்தமாக ஓடவிட்டு பார்க்கும் போது அழகாக இருக்கும். இந்த பவர்பாயின்டில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன்ற வாழ்த்து செய்திகளை உருவாக்கி நம் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்வோம். இப்படி உருவாக்கும் பவர்பாய்ன்ட் பைல்களை எவ்வாறு வீடியோவாக மாற்றுவது என காண்போம்.  வீடியோவாக மாற்றினால் அந்த பைலை சிடியில் காப்பி செய்து டிவியில் பார்க்கலாம் நம்முடைய மொபைல் போன்களில் பார்த்து மகிழலாம் யூடுப் போன்ற வீடியோ தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
  • இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அந்த பைலை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். 
  • இன்ஸ்டால் செய்ததும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • முதலில் படத்தில் காட்டியுள்ள படி New Task என்ற பட்டன் மீது க்ளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் உள்ள Add file(s) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • Add File(s) க்ளிக் செய்ததும் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வீடியோவாக கன்வெர்ட் செய்ய விரும்பும் பவர்பாய்ன்ட் பைல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இதில் பல பைல்களை தேர்வு செய்து ஒரே வீடியோவாகவும் உருவாக்கி கொள்ளலாம்.)
  • நீங்கள் பைலை தேர்வு செய்ததும் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அந்த விண்டோவில் நீங்கள் மாற்ற விரும்பும் வீடியோ வகையை(Format) தேர்வு செய்யவும். (படத்தில் நான் குறிப்பிட்டு காட்டி இருக்கும் வகைகள் மட்டும் இலவசம். கீழே உள்ள பார்மட்களில் மாற்ற விரும்பினால் மென்பொருளை காசு கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும்).
  • குறிப்பிட்ட பார்மட் தேர்வு செய்தவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் Convert என்ற பட்டனை க்ளிக் செய்யவும். இந்த பட்டனை அழுத்துவதற்கு முன் உங்கள் கணினியில் செயலில் வேறு ஏதேனும் மென்பொருள் இயங்கி கொண்டிருந்தால் அனைத்தையும் க்ளோஸ் செய்து விடவும்.
  • அந்த Convert பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு வரும் எச்சரிக்கை செய்தி விண்டோவை OK கொடுத்தால் பவர்பாய்ன்ட் பைல் கன்வெர்ட் ஆக தொடங்கும். 
  • நீங்கள் தேர்வு செய்த பைல்களின் அளவிற்கு ஏற்ப நேரம் எடுத்து கொள்ளும் காத்திருக்கவும்.
  • கன்வெர்ட் ஆகி முடிந்ததும் உங்களுக்கு அந்த வீடியோ பைல் ஓபன் ஆகும் அந்த வீடியோ பைலை இனி உங்களுக்கு தேவையான இடத்தில்  உபயோகித்து கொள்ளலாம்.
டுடே லொள்ளு 

மனுஷங்களா மாற எவ்ளோ ட்ரை பண்ணாலும் இந்த நாக்கு வந்து காட்டி கொடுக்குதே.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

  1. வழக்கம் போல அசத்தலான பதிவு ஒன்னு போட்டுட்டீங்க சசி! இந்த வலையுலகத்துல நீங்கதான் எங்கள் தொழில்நுட்ப குரு! உங்களுக்கு நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்!!!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. த கமெண்ட் ஆஃப் ரானா ஹெக்ஸாடாக்ட்டைலா ஈஸ் சூப்பர்

    ReplyDelete
  4. மற்றுமொரு பயனுள்ள பதிவு.. நன்றி சசி!

    ReplyDelete
  5. புதிய தகவல். நான் Movie edit தான் யூஸ் பண்ணுவேன். நீங்கள் சொல்லும் படி பார்த்தால், பவர்பாயின் இலகுவாக இருக்கும் என்று தோன்றுது, நன்றிகள் சகோ.

    ReplyDelete
  6. பவர் பாயிண்ட் வீடியோவாக மாற்ற முடியும் என இன்றுதான் தெரிந்துகொண்டேன் நன்றி...படங்கள் அமைத்து அதை ஸ்லைடு ஷோ போல என் பிளாக்கில் காட்ட முடியுமா

    ReplyDelete
  7. ஒரு அரியத் தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே நானும் இன்றுதான் முதல் முறையாக பவர் பாயிண்ட் வீடியோவாக மாற்ற முடியும் என்பதை அறிந்துகொண்டேன் .

    ReplyDelete
  8. சசி...
    எல்லாம் ஒரு உரிமை தான்.

    நீங்கள் எவ்வளவு அரிய தகவல்களை தந்து அனைவரின் பாராட்டுதலை பெறுகிறீர்கள். நீங்கள் தொழிற்நுட்ப பதிவினை இடும் போது சில பதிவுகளை அலசி ஆராய்ந்து தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டிய கட்டாயம். அந்த விஷயத்தில் மாற்று வழி கிடையாது. உங்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட பதிவினை யாராவது திருடி உங்களது பெயரில் வெளியிட்டு அவர்கள் தலைசிறந்த பதிவராக வலம் வருவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீரா?கஷ்டப்பட்ட நீங்கள் அடையாளம் தெரியாமல் போனால் உங்களுக்கு வருத்தம் இருக்காதா? நாங்கள் எதிர்பார்ப்பது பெரிய புரட்சி அல்ல.திறமைசாலிகள் திரும்பி சென்று விடக்கூடாது.

    ReplyDelete
  9. @விமர்சனம்
    தங்களின் கருத்திற்கு முழுமனதோடு உடன்படுகிறேன்.

    ஒரு பதிவில் இருந்து அனைத்தையும் அப்படியே காப்பி செய்து போடுவது என்பது தவறு தான். அந்த பதிவின் உள்கருத்தை மையமாக கொண்டு அவர்கள் சொந்த நடையில் எழுதினால் யாருக்கும் பிரச்சினை இல்லை.

    அப்படி இல்லை என்றாலும் மதி சுதா கூறியது போல ஒரு சிறிய முன்னோட்டத்தை அவர்கள் தளத்தில் இட்டு மேலும் படிக்க என்று ஒரிஜினல் பதிவின் லிங்க் கொடுத்தாலும் இந்த பிரச்சினை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  10. Don't think about others always everyone looking some new information's only so don't stop..pls

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press