Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் தேடலில் வீடியோ Previews பார்க்கும் வசதி

கூகுள் இது இணையத்தின் களஞ்சியமாகும். கூகுளின் சேவைகள் சொல்லி மாளாது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.  இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் கூகுளின் சேவை பாராட்டுக்குரியதே. இணையத்தில் நிறைய தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் மற்றவைகளை விட தனிச்சிறப்பு பெற்றது. நாம் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக கொடுப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகிறோம். நாம் கூகுள் தேடலின் போது வீடியோக்களை Preview பார்க்கும் வசதி.

இந்த வசதி மூலம் நாம் அந்த வீடியோவை சுமார் 5 நொடிகள் வரை கூகுளில் காணலாம். இதில் நமக்கு தேவையான வீடியோவை மட்டும் நாம் க்ளிக் செய்தால் நேரடியாக அந்த வீடியோ நமக்கு ஓபன் ஆகும். இந்த முறையில் யுடியுப் வீடியோக்களை மட்டுமே காணமுடிகிறது. மற்ற தளங்களில் உள்ள வீடியோக்களின் preview தெரிவதில்லை.
  • முதலில் கூகுள் தளத்திற்கு சென்று ஏதேனும் வீடியோ பைலை தேடுங்கள்.
  • முடிவு வந்ததும் அந்த வீடியோவுக்கு நேராக உள்ள ஒரு லென்ஸ் போன்ற ஐகானை க்ளிக் செய்தால் அந்த வீடியோவுக்கு சம்பந்தமான அணைத்து வீடியோக்களும் வரும்.
  • அது தானாகவே ஒவ்வொரு வீடியோவாக ஓடும் அதில் உங்களுக்கு தேவையான வீடியோ மீது க்ளிக் செய்து அந்த வீடியோவை பார்த்து கொள்ளுங்கள்.
  • இது போன்று வரும் Preview வீடியோக்களில் ஆடியோவை கூட நாம் கேட்க முடியும்.
டுடே லொள்ளு 


எங்கடா  வெளிய வர்ற போடா உள்ள , அட திரும்பவும் வர்ற என் கிட்ட அடிபட்டே சாகப்போற 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. அட இப்படியும் ஒரு வசதி கொடுத்துவிட்டார்களா? இருங்க சசி, செக் பண்ணி பார்க்கிறேன்! அப்புறம் டுடே லொள்ளு அசத்தல்! அதுல ஒண்ணும் உள்குத்து இல்லையே?

    ReplyDelete
  2. நண்பா, கமென்ட் பகுதியில், எங்கள் ப்ரோபைல் படங்கள் தெரியாதவாறு, செட் பண்ணியிருக்கிறீர்கள்! இதனால் என்ன லாபம்? ப்ளாக் வேகமாக ஓபன் ஆகுமா?

    ReplyDelete
  3. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

    //ப்ளாக் வேகமாக ஓபன் ஆகுமா?//

    இருக்கலாம்.

    ReplyDelete
  4. நண்பா என்னென்னமோ கண்டுபுடிச்சி சொல்லுறே நன்றிய்யா!

    ReplyDelete
  5. மீண்டும் ஒரு அருமையான தகவல் தெரியப்படுத்தியமைக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  6. நல்ல தகவல்.. தாங்களுக்கு ஆப்லைனில் ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தேன் பார்த்திங்களா?

    ReplyDelete
  7. தகவல் பிடித்திருந்தது. நன்றி.

    ReplyDelete
  8. லொல்லு படம் சிரிச்சிகினே இர்க்கேன்

    ReplyDelete
  9. அண்ணே...டுடே லொள்ளு..ரொம்ப டாப்பு.

    ReplyDelete
  10. இன்னைக்கு சொல்லியிருக்கற விஷயம் புதுசு. பயன்படுத்தி பாக்கறேன்

    ReplyDelete
  11. பயனுள்ள மற்றுமொரு தகவல் தந்தமைக்குமிக்க நன்றி சசி அவர்களே..!

    ReplyDelete
  12. எனது பேஸ் புக் நார்மல் அக்கவுண்டை Page ஆக மாற்றினேன்

    அது திருப்தீல்லாததால் அதை Delete செய்தேன் என் அக்கவுண்ட்டும் சேர்த்து Delete ஆகி விட்டது

    இப்போது நான் லாகின் செய்தால் PAGE மட்டும் தான் Create பண்ண முடிகிறது

    நார்மல் அக்கவுண்ட் எவ்வாறு திறப்பது

    உதவவும்

    ReplyDelete
  13. உங்களின் தகவல்கள் அனைத்தும் எமக்கு விருந்து வைக்கின்றன. உடனுக்குடன் தொழில் நுட்பத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்குப் பாராட்டுக்கள் சகோ.

    ReplyDelete
  14. கூகிள் வீடியோ தேடலும், எனக்கு ஓர் புதிய அறிமுகமாக இருக்கிறது சகோ.
    நன்றிகள் சகோ.

    ReplyDelete
  15. மிகவும்,தேவையான பயனுள்ள தகவல் நண்பா..

    ReplyDelete
  16. டுடே லொள்ளுல சசி யாரையோ மறைமுகமா தாக்கற மாதிரி இருக்கு.. ஹா ஹா

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி சசி!!

    ReplyDelete
  18. நல்ல தகவல் நன்றிகள்

    ReplyDelete
  19. ரொம்ப நன்றி சகோதரம் பெரிய சிரமத்தில் இருந்து தப்பியாச்சு...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press