Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas)  புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.  

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். 
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். 
  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். 
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

டுடே லொள்ளு 
இனம் விட்டு இனம் நட்பு ஆஹா இதுவல்லவோ சமத்துவம் நாமும் இருக்கோமே ஒரே வீட்டுக்குள்ளேயே அடிச்சிக்கிட்டு சாவுறோம்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

22 comments :

  1. அத்தியாவசியமான பதிவு. நன்றி சசி குமார்.

    ReplyDelete
  2. நன்றி சசிகுமார்.. மிகவும் தேவையான குறிப்புகள்

    ReplyDelete
  3. பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் சாதாரணம் என நினைத்தேன்.. ஆனால் படித்த பிறகுதான் புரிந்து அது மிகவும் அனைவருக்கும் பயன்படக்கூடிய விஷயம் என்று..

    பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள் சசி!!

    ReplyDelete
  4. அருமையான தகவல், நானும் இதை பின்பற்றுகிறேன்.
    நன்றி...

    ReplyDelete
  5. தேவையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  6. சசி அண்ணே தொடர்ந்து மிகவும் பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அளித்து வரும் உங்களுக்கு உங்கள் பயனாளரின் நன்றிகள்

    ReplyDelete
  7. கடன் பட்டாவது ஒரு செல் வாங்கி வைத்துக் கொண்டிருக்கும் இந்த உலம் அதன் பாதிப்பை இன்னும் முழுமையாக உணர வில்லை.

    இதன் பாதிப்பு உடனடியாக இல்லை என்பதால் மிகவும் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள்...

    இதுப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும்...

    ReplyDelete
  8. தற்போது சூழலுக்கு எற்ற நல்ல பதிவு...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. மிகவும் பிரயோசனமான தகவல் சகோதரம் நன்றி...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

    ReplyDelete
  10. ஆணியே புடுங்கவேண்டாம்ன்னு சொன்ன மாதிரி செல் போனே வேண்டாம்ன்னு விட்டுட்டா பிரச்சினை இல்லை....

    ReplyDelete
  11. கதிர் வீச்சு..கதிர் வீச்சு..அப்படின்னு சொல்லியிருக்கீங்க, அது என்ன கதிர் வீச்சு அது எவ்விதத்தில் பாதிப்பை உண்டாக்கும் என்று விளக்கமாகச் சொன்னீங்கன்னா புரிந்து கொள்ள வசதியாய் இருக்கும். Ear Plug வச்சு கேட்டால் இந்த தீய விளைவுகளில் இருந்து தப்ப முடியுமா? கை பேசிகளை உபயோகிக்கா விட்டாலும், கை பேசி டவர்கள் உள்ளனவே, அவற்றில் இருந்து எந்த பாதிப்பும் வராதா? தெளிவு படுத்தினால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  12. பயனுள்ள தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க சகோ.
    எனக்கும் செல்போனுக்கும் ஏழரை சசி,
    காரணம் என்னால் இக் கதிர் விச்சுக் காரணமாகவோ/
    தொடர்ச்சியாக மொபைல் ஹீற் ஆகுவதன் காரணத்தாலோ தொடர்ந்து பேச முடிவதில்லை. தொடர்ந்து பேசினால் எனக்கு தலையிடியோடு, பின் தலைப் பக்கம்(பிடரியில்) கொதிப்போடு டென்சனும் ஏற்படும் சகோ.

    ReplyDelete
  13. இது போன்ற செய்திகள் நிறையவே சொல்லப்படுகிறது. இந்தச் செய்திகளை யார் சொல்கிறார்கள். சரியான முறையில் ஆய்வு செய்துதான் சொல்கிறார்களா? என்ற தகவல்களையும் முடிந்தால் கொஞ்சம் வெளியிடுங்களேன். உதவியாக இருக்கும்

    ReplyDelete
  14. இது போன்ற செய்திகள் நிறையவே சொல்லப்படுகிறது. இந்தச் செய்திகளை யார் சொல்கிறார்கள். சரியான முறையில் ஆய்வு செய்துதான் சொல்கிறார்களா? என்ற தகவல்களையும் முடிந்தால் கொஞ்சம் வெளியிடுங்களேன். உதவியாக இருக்கும்

    ReplyDelete
  15. அருமையான தகவல், நானும் இதை பின்பற்றுகிறேன்.
    நன்றி...

    sivakumar G
    madurai

    ReplyDelete
  16. nanri..sasi. Entha radiation powerai 70% varai kuraikkalam.
    seithikku call 9444931202. kumaran.k. pondicherry.

    ReplyDelete
  17. kathirveechil erunthu nammai 70% vari pathu kathu kolla..
    9444931202.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press