Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. 
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பலதுறைகளில் சாதனை படைத்த எழுத்தாளார் சுஜாதா உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் இன்றும் உலக தமிழர்கள் அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம்பெற்றுள்ளது.

Tamil Novels Written by Writer Sujatha 
No. Book Title Author
  Download                 
1 Amma mandapam Sujatha
Free Tamil eBooks
2 Arangetram Sujatha
Free Tamil eBooks
3 Arisi Sujatha
Free Tamil eBooks
4 Curfew Sujatha
Free Tamil eBooks
5 Eldorado Sujatha
Free Tamil eBooks
6 Eppadiyum vazhalam Sujatha
Free Tamil eBooks
7 Film utsav Sujatha
Free Tamil eBooks
8 Ilaneer Sujatha
Free Tamil eBooks
9 Jannal Sujatha
Free Tamil eBooks
10 Kaalgal Sujatha
Free Tamil eBooks
11 Kaaranam Sujatha
Free Tamil eBooks
12 Nagaram Sujatha
Free Tamil eBooks
13 En Iniya Endhira Sujatha
Free Tamil eBooks
14 Merina Sujatha
Free Tamil eBooks
15 Sujatha Sirukadhaigal Sujatha
Free Tamil eBooks
16 Katradhum Petradhum (Vikatan) Sujatha
Free Tamil eBooks
17 Kadavul Irukkirara Sujatha
Free Tamil eBooks

சுஜாதா பல நூற்றுகணக்கான நாவல்களும் சிறுகதைகளும் நாடங்களும் இயற்றி இருக்கிறார். அதில் சில புத்தகங்களை மட்டுமே என்னால் இணையத்தில் தேடி எடுக்க முடிந்தது அதை தான் உங்களோடு பகிர்து கொள்கிறேன். உங்களுக்கு வேறு ஏதேனும் புத்தகங்களின் லிங்க் தெரிந்தால் கீழே கமென்ட் பகுதியில் தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி : தமிழ் விக்கிபீடியா 
டுடே லொள்ளு 


ங்கொய்யால இது அமெரிக்கா இல்ல வந்து மோதிட்டு போறதுக்கு இந்தியாடா, நீங்க கில்லாடின்னா நாங்க கில்லாடிக்கும் கில்லாடி.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

33 comments :

 1. //பல நீற்றுகனக்கான நாவல்களும்//

  பல நூற்றுக் கணக்கான நாவல்களும்


  திமிலா கிடைச்சால் சொல்லுங்க ப்ளீஸ்.

  ReplyDelete
 2. மகிழ்ச்சி தரும் விஷயம்.

  ReplyDelete
 3. நன்றி சசி..
  இந்த லொள்ளு சூபரப்பூ

  ReplyDelete
 4. @துளசி கோபால்

  பிழையை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி. திமிலா கிடைத்தால் லிங்க் கொடுக்கிறேன் நண்பரே.

  ReplyDelete
 5. I also upload some sujatha books in my blog. . (Katrathum petrathum, oru vingana parvai etc). Pls visit www.kingraja.co.nr

  ReplyDelete
 6. இதையெல்லாம் இப்படி பொதுவுல வைக்கிறதுக்கு அனுமதி உண்டான்னு மொதல்ல கன்பார்ம் பண்ணிங்கங்க பாஸ் ;-)))))

  ReplyDelete
 7. தேவையான பகிர்வு தொடருங்கள் நண்பா.

  ReplyDelete
 8. நல்லதொரு பதிவு, பகிர்வு,
  எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை மின் நூல் வடிவில் எமக்காக தேடி எடுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

  நன்றி சகோ.

  ReplyDelete
 9. மிக்க மிக்க நன்றி சசிக்குமார். எங்கயாவது தேடி டவுன்லோட் செய்யனும்னு பாத்திட்டிருக்கும்போது தெய்வம் மாதிரி ஓதவியிருக்கீங்க பாஸ். நன்றி...

  ReplyDelete
 10. தயவு செய்து நில்லுங்கள் ராஜாவே. கதையை அப்லோட் செய்யவும்.

  ReplyDelete
 11. ரொம்ப உபயோகமுள்ள பதிவு. உங்கள் ப்ளாக்கில் இருந்து நிறைய பல உபயோகமான தகவல்களை தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு சசி அண்ணே பகிர்வுக்கு நன்றி அண்ணே

  ReplyDelete
 13. பகிர்வுக்கு ரொம்ப ரொம்ப நன்றி...

  ReplyDelete
 14. அருமையான நாவல்கள் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 15. நல்ல காரியம்! சந்தோஷமா இருக்கு! வந்தேமாதரம்! ஜெய்ஹிந்த்!

  ReplyDelete
 16. //துளசி கோபால் said...
  திமிலா கிடைச்சால் சொல்லுங்க ப்ளீஸ்.//
  டீச்சர், இடுகையில் இருக்கும் 15.சுஜாதாவின் சிறுகதைகளில் நீங்கள் கேட்டிருந்த திமலா சிறுகதை இருக்கிறது.

  ReplyDelete
 17. ஆஹா...ஆஹா....

  பாலராஜன்கீதா ரொம்ப நன்றி.

  போனவாரம் திருப்பதி போனது முதல் இந்தத் திமிலாவின் நினைப்புதான்:-)

  சாமியே ரெண்டாம் பட்சமுன்னு ஆக்கி இருக்கு இது!

  ReplyDelete
 18. மிக்க‌ ந‌ன்று/ந‌ன்றி ச‌சி.

  ReplyDelete
 19. @துளசி கோபால்
  மேடம் அது திமலா! ;-)

  ReplyDelete
 20. துளசி கோபால் மேடம்.. அது இந்த பதிவில் இருக்கும் சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பிலேயே இருக்கிறது.. ;-))

  ReplyDelete
 21. RVS,

  அட........... ஆமாம்ல்ல? யானைக்கு(ம்) அடி சறுக்கிடுச்சே:-)))))

  ReplyDelete
 22. விக்ரம்
  http://www.mediafire.com/?jow1jmmymit
  ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  http://www.mediafire.com/?n3lmho54yhe
  பிரிவோம் சந்திப்போம்
  http://www.mediafire.com/?rdjo9d0zjmsgr62
  மீண்டும் ஜீனோ
  http://www.mediafire.com/?3ymijmkjwmj
  கொலையுதிர்காலம்
  http://www.mediafire.com/?w93xkvto8y3x88q
  Dr.நரேந்திரனின் வினோத வழக்கு
  http://www.mediafire.com/?0jzjigmdnx4
  கணையாழியின் கடைசி பக்கங்கள்
  http://www.mediafire.com/?2dokmkz4zjy

  ReplyDelete
 23. நல்ல தகவல்கள் நன்றி வணக்கம்
  நாகராஜன்
  anagarajan08@gmail.com

  ReplyDelete
 24. நல்லதொரு முயற்சி

  சாதனைகள் தொடரட்டும்..

  நன்றியுடன்,

  சம்பத்குமார்.பொ

  http://parentsactivitytamil.blogspot.com

  ReplyDelete
 25. இப்படி ஓசியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டாம்!!சுஜாதாவிற்கு மட்டுமல்ல எந்த எழுத்தாளருக்கும் நாம் செய்யும் மரியாதை அவர்களின் எழுத்தை காசு கொடுத்து வாங்கி படிப்பதுதான்!

  ReplyDelete
 26. ரொம்ப உபயோகமுள்ள பதிவு. உங்கள் ப்ளாக்கில் இருந்து நிறைய பல உபயோகமான தகவல்களை தெரிந்து கொண்டேன்.
  நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய
  இதை nan evvaru ev blogel kondu varuvadu

  ReplyDelete
 27. ரொம்ப உபயோகமுள்ள பதிவு. உங்கள் ப்ளாக்கில் இருந்து நிறைய பல உபயோகமான தகவல்களை தெரிந்து கொண்டேன்.
  {நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய}
  பிளாக்கரில் இதை சேர்க்க என்ன செய்வது?
  kaniyuri@gmail.com

  ReplyDelete
 28. Mohammed Zubair said
  //
  {நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய}
  பிளாக்கரில் இதை சேர்க்க என்ன செய்வது?
  //

  இதற்க்கு நிறைய வலை தளங்கள் உள்ளது.

  குறிப்பாக ziddu.com, tamilcube.com, scribd.com, 4shared.com போன்ற பல வலை தளங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள உதவுகின்றன.

  உங்கள் ப்ளாக்கில் இதை சேர்க்க அதற்கான சுட்டியை (Link)இணைத்தாலே போதுமானது,

  உதாரணம்:
  http://www.ziddu.com/download/10008570/EenEtharkkuEppadi-Sujatha..pdf.html

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press