Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

நம் மெயிலுக்கு வரும் தேவையில்லாத மெயில்களை எப்படி தடுப்பது

நாம் இணையத்தில் பல்வேறு தளங்களில் உள்ளே உள்ளே செல்லும் போது நம் விவரங்களை  கொடுக்கும் போது நம்முடைய மெயில் ஐடியையும்  கொடுப்போம். அப்படி கொடுத்த மெயில் ஐடிக்கு அந்த தளத்தில் இருந்து அவர்களின் விளம்பர செய்திகளை நம் மெயிலுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பார். ஒரு சில மெயில்களில் unsubscribe என்ற வசதி இருக்கும் அதன்மூலம் நாம் தடுத்து விடலாம் ஆனால் ஒருசில மெயில்களில் இந்த வசதி இருக்காது அது போன்ற மெயில்களை எப்படி நாம் unsubscribe செய்வது என்று இங்கு பார்ப்போம்.
  • இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. முதலில் இந்த https://www.unsubscribe.com/ லிங்கில் சென்று அந்த தளத்தை திறந்து கொள்ளவும்.
  • அங்கு உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கீழே உள்ளதை போல பக்கம் திறக்கும்.
  • இதில் உங்கள் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். (உங்கள் மெயிலுக்கு அதே பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் கொடுக்கவும்)
  • Submit பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் இரண்டு வகை உள்ளது இதில் எப்பவும் போல Free க்ளிக் செய்து உள்ளே நுழையவும் (இதுக்கெல்லாம் காசு செலவு பண்ண நாங்க என்ன முட்டாளா).
  • அடுத்து வரும் விண்டோவில்  
  • அடுத்து வரும் விண்டோவில் Download பட்டனை அழுத்தினால் உங்களின் நீட்சி டௌன்லோட் ஆகும். அடுத்து வரும் விண்டோவில் Install என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியில் install செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் மெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே ஓபன் செய்து இருந்தால் refresh கொடுங்கள். 
  • உங்களுக்கு Unsubscribe என்ற புதிய பட்டன் வந்திருப்பதை காண்பீர்கள்.
  • இப்பொழுது Unsubscribe வசதி இல்லாத மெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஓபன் செய்ததும் இந்த Unsubscribe என்ற பட்டனை அழுத்தவும். 
  • அவ்வளவு தான் அடுத்த நிமிடமே உங்களுக்கு இந்த மெயிலை தடை செய்ததற்கான ஒரு மெயில் Unsbuscribe தளத்தில் இருந்து உங்களுக்கு வரும். 
  • அவ்வளவு தான் தொல்லை மெயிலுக்கு தடை செய்தி அனுப்பப்பட்டு விட்டது.  
  • இன்றிலுருந்து அதிகபட்சமாக 10 நாட்களுக்கு மேல் அந்த தடை செய்த ஈமெயில் வருவது தடை செய்யப்படும்.
டுடே ஸ்பெஷல்: குரோம் நீட்சி- Alexa Traffic Rank 

இந்த நீட்சி மிகவும் பயனுள்ள நீட்சி. குறிப்பாக பதிவர்களுக்கு பயனுள்ள நீட்சி நீங்கள் இந்த நீட்சியை நிறுவினால் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த தளத்தின் அலெக்சா ரேங்க் இந்த நீட்சி காட்டும். அந்த தளத்தில் அலெக்சா விட்ஜெட் இல்லை என்றாலும் இந்த நீட்சி சூப்பராக வேலை செய்கிறது. தினமும் அலெக்சா ரேங்க்கை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் பயனுள்ள நீட்சி.

டுடே லொள்ளு 


பில்லா பில்லா அஜித் நடந்தா மட்டும் தான் பாடுவீங்களா கொஞ்சம் பாடுங்கப்பு 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளையும் மற்றும் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரையும் சென்றடையும். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. நான் தேடியது. தந்துவிட்டீர்கள். நன்றி சசி.

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல் நண்பா, நானும் எதிர்பார்த்த ஒன்று அருமை...

    தொடரட்டும் உங்கள் பணி

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. இந்த தளம் யாகூ மெயிலுக்கும் பயன்படுமா நண்பரே?

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள தகவல் .
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  6. @மாணவன்

    பயன்படும் நண்பா மெயில் கிளைன்ட் பகுதியில் யாஹூ தேர்வு செய்யுங்கள்.

    ReplyDelete
  7. spam தொல்லை இனி இல்லை :)

    டுடே லொள்ளு
    my name is billa .............

    ReplyDelete
  8. நன்றி சசி, ரெம்ப நாளா இததான் தேடினேன்!

    ReplyDelete
  9. உபயோகமுள்ள பதிவு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. அருமை நண்பரே..! இணைய அறிமுகம் இல்லா எனக்கு கூட ஒரு தனித் தளம் அமைக்க உதவியது உங்களின் வலைப்பூ... அதுமட்டுமல்ல இணையத்தை கையாள்வது பற்றி ஓரளவு தெளிவும் தங்களால்தான் எனக்கு கிடைத்தது..
    நன்றி...!!

    ReplyDelete
  11. it would be very useful information those who facing problem.is there any limit in period using free option

    ReplyDelete
  12. எது தேவையான மெயில் எது தேவையில்லாத மெயில் என்று எப்படி கண்டுபிடிப்பது...?

    ReplyDelete
  13. தல.. அருமையான தகவல்கள் மற்றும் டுடே லொள்ளு அருமை..!!

    ReplyDelete
  14. Good information, thank you

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press