Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக்கை வீழ்த்துமா கூகுள் + - கருத்து கணிப்பு

இணையத்தில் ஜாம்பவானான கூகுளையே ஆட வாய்த்த தளம் என்றால் அது பேஸ்புக் தான். பேஸ்புக் தளம் ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்து. பல கிளை இணைய தளங்களை வைத்துள்ள கூகுளால் பேஸ்புக் எனும் ஒரே தளத்தின் வளர்ச்சிக்கு முன் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனை சமாளிக்க Buzz வசதியை புகுத்தியது. அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெற வில்லை. அதனால் பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டு படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு எடுத்த ஆய்வின் படி பேஸ்புக் தளம் கூகுள் தேடியந்திரத்தை விட ரேங்கில் உயர்ந்தது. ஆனால் பல கிளை (youtube,blogger,Gmail) தளங்களை கூகுள் வைத்திருந்ததால் அவைகளின் துணையோடு முதலிடத்தை தக்கவைத்தது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பேஸ்புக் முதலிடத்திற்கு வந்துவிடும் என்று இணைய நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இது மேலும் கூகுளின் வயிற்றில் புளியை கரைத்தது. நிலைமையை புரிந்து கொண்ட கூகுள் சுதார்த்து கொண்டு கூகுள்+ எனும் சமூக இணையதளத்தை வெளியிட்டுள்ளனர். இந்த தளம் வெளியிட்ட அடுத்த மணி நேரத்தில் இந்த வசதியை பெற வாசகர்கள் குவிந்தனர். கூகுள் சர்வர்கள் ஸ்தம்பித்தது. இந்த அளவு ஆதரவை எதிர்பார்க்காத கூகுள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தது. சர்வர்கள் பிரச்சினையால் புதிய வாசகர்களுக்கு வசதி கொடுப்பதை நிறுத்தினர்.  இன்றளவும் இந்த தளம் சோதனை பதிப்பிலேயே தான் உள்ளது. ஆனால் சோதனை பதிப்பிலேயே இந்த தளத்தை மில்லியன் கணக்கான வாசகர்கள் பயன்படுத்தி கொண்டு உள்ளனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் யாரை பின்னுக்கு தள்ளி யார் முன்னேறி வருகிறார்கள் என. 
டுடே லொள்ளு
ஏதாவது புதையல் இருக்குமோ?? மாப்ள எட்றா அந்த அருவாள

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

26 comments :

 1. //புதையலா? எங்கே? எங்கே?// ஏன் பாஸ் அலையுரிங்க ?

  ReplyDelete
 2. ரெண்டு பெரிய பயில்வான்களின் மோதல்...பார்க்கும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்...பகிவுக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 3. எனக்கென்னமோ மூஞ்சிப்புத்தகம் தான் பெட்டர் எண்டு தோணுது ..!

  ReplyDelete
 4. கருத்து சொல்வதற்கு இன்னும் கொஞ்ச கால அவகாசம் தேவைப் படுகிறது. கூகிள பிளஸ் இப்பொழுது ஆரம்பக் கட்டம்தான் - இதையும் ஒரு ஆப்ஷன் என்று இணைக்கலாம் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 5. நண்பா என் தளத்தின் பதிவுகளை ஏற்றுமதி செய்யும் போது இப்படி வருகிறது....

  மன்னிக்கவும், சர்வர் பிழையின் காரணமாக இறக்குமதி தோல்வியடைந்தது. பிழைக்குறியீடு bX-3cjaxm

  இதனை எப்படி சரி செய்வது........

  உதவி செய்யுஙள் பிலிஸ்...

  ReplyDelete
 6. பொறுப்போம் .காலம் விடை சொல்லும்

  ReplyDelete
 7. @prabhadamu

  திரும்பவும் முயற்சி செய்யுங்கள். வேறு உலவியிலும் சோதித்து பாருங்கள்.

  ReplyDelete
 8. கொஞ்ச நாளைக்கு பொழுது நல்லா போகும்....!!!!

  ReplyDelete
 9. புதியவைகளை மக்கள் அதிகம் விரும்புவார்கள்...

  கண்டிப்பாக கூகுள்+ பெரிய வெற்றிப் பெரும் என்று நம்புவோம்..

  ReplyDelete
 10. முடிய வில்லை நண்பா உதவுங்கள் பிளீஸ்....

  ReplyDelete
 11. மாப்ள.. உனக்கு என்ன தோணுது..

  ReplyDelete
 12. பேஸ்புக்கின் வளர்ச்சியை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது பாஸ். இது எனது கணிப்பு.

  ReplyDelete
 13. @prabhadamu

  ஜிமெயிலில் ஆன்லைனுக்கு வாருங்கள்.

  ReplyDelete
 14. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 15. பேஸ் புக் அல்லது கூகிள் பிளஸ் இது ரெண்டுல எது புதையல்...

  ReplyDelete
 16. எப்புடி பாத்தாலும் பசங்களால பெத்தவங்களுக்கு தான் வயத்துல புதையல சாரி புளிய கரைக்கும்.

  ReplyDelete
 17. facebook ஐ காட்டிலும் கூகுல் உபயோகிப்பது எளிதாக இருந்தது...அது போல் கூகுல் + வெல்லும் என கருதுகிறேன்

  ReplyDelete
 18. இரண்டுமே நல்லா இருக்கு...

  ReplyDelete
 19. இரண்டுமே நன்றாக இருக்கிறது சசி.

  போகிற போக்கைப் பார்த்தா கூகுள் முன்னுக்குச் சென்றுவிடும் போலத்தான் தெரிகிறது.

  இயங்குதளம்
  உலவி
  தேடுஇயந்திரம்
  மொழிபெயர்ப்பு
  மின்னஞ்சல்
  வலைப்பதிவு

  என பிற்காலத்தில் இவையெல்லாவற்றையும் இணைத்து ஒரே முகப்பில் கூட எதிர்காலத்தில் கூகுள் தந்தாலும் வியப்பதற்கில்லை.

  ReplyDelete
 20. அன்பு நண்பா இன்று வலைச்சரத்தில்

  கவித்தமிழ்

  http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

  நேரம் கிடைக்கும் போது வாங்களேன்.

  ReplyDelete
 21. அன்பு நண்பா தங்கள் இடுகையுடன் தொடர்புடைய இவ்விடுகையையும்

  பாருங்க

  http://qaruppan.blogspot.com/2011/07/google-vs-facebook.html

  ReplyDelete
 22. எனக்கும் ஒரு g + இன்விடேசன் இருந்த அனுப்புங்க பாஸு உள்ள விடமாடீங்குறாங்கே !!??

  ReplyDelete
 23. பாஸ், பொறுத்திருந்து பார்ப்போம், கூகிளின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை, கருத்துக் கணிப்பும் கூகிள் தான் முன்னுக்கு வரும் என்று சொல்கிறது,

  பாம்பைக் காட்டி நம்மளைப் பயமுறுத்துவது என்ன டுடே லொள்ளா. ஏன் இந்தக் கொலை வெறி மச்சி.

  ReplyDelete
 24. யார் முன்னுக்கு வந்தாலும் லாபம் அடையப்போவது என்னமோ நாம்தான். எனவே பொறுத்திருந்து பாப்போம்.

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press