Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கணினியில் தேவையில்லாத பைல்களை சுலபமாக நீக்க CCleaner - V3.08

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 
புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில: 
  • பயர்பாக்ஸ் 5 உலவியால் ஏற்ப்படும் தேவையில்லாத பைல்களை அளிக்க உதவுகிறது.
  • மீடியா பிலேயர்களினால் உருவாகும் தேவையில்லாத பைல்களை நீக்குகிறது.
  • கணினியில் உள்ள Recent Documents பகுதியை சுத்தம் செய்கிறது.
  • கூகுள் குரோம் மூலம் உருவாகும் downloded history பைல்களை நீக்குகிறது.
  • இது போன்று மேலும் பல தேவையில்லாத பைல்களை நம் கணினியில் இருந்து நீக்கி நம் கணினியை சுத்தமாக வைத்து கொள்கிறது.
  • விண்டோஸ் 7/Vista/XP/2000 போன்ற இயங்கு தளங்களில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.
  • இந்த லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

உபயோகிக்கும் முறை:
  • டவுன்லோட் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால்  உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். 
  • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். 
  • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. ஓ.. அப்ப இதையெல்லாம் டஸ்டர் வச்சி அழிக்க கூடாதா..?

    ReplyDelete
  2. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    ஓ.. அப்ப இதையெல்லாம் டஸ்டர் வச்சி அழிக்க கூடாதா..?

    யோவ் , இந்த மாதிரி லொள்ளு கமெண்ட் போட்டா சசி உங்க பிளாக்கை ஹாக் பண்ணிடுவாரு. ஹா ஹா ஜாக்கிரதை

    ReplyDelete
  3. ////
    சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    3 ஜூலை, 2011 3:16 pm

    # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    ஓ.. அப்ப இதையெல்லாம் டஸ்டர் வச்சி அழிக்க கூடாதா..?

    யோவ் , இந்த மாதிரி லொள்ளு கமெண்ட் போட்டா சசி உங்க பிளாக்கை ஹாக் பண்ணிடுவாரு. ஹா ஹா ஜாக்கிரதை///////



    போட்டு கொடுத்தாச்சா...
    ரைட்டு...

    ReplyDelete
  4. c cleaner ஐ விட சிறந்த cleaner இருக்கா?

    ReplyDelete
  5. நன்றி சசி...ஆமா, எது தேவையான ஃபைலு..எது தேவையில்லாத பதிவுன்னு எப்படிக் கண்டுபிடிக்கறது பாஸ்?

    ReplyDelete
  6. டவுன்லோடு செய்து கொண்டுருக்கிறேன் பயனுள்ள தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  7. மாப்ள புத்சா வந்த தகவலுக்கு நன்றிங்கோ!

    ReplyDelete
  8. பயனுள்ள பகிர்வு.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  9. சிபிக்கு ஒவ்வொரு ப்ளாக்லயும் போய் போட்டு கொடுக்கிறதே இன்னைக்கு பொழப்பு போல!

    ReplyDelete
  10. அவசியமான உபயோகமான தகவல்கள்
    நண்பரே,

    ஏற்கனவே பய்ன்படுத்திவரும் சிசி - க்ளீனரை அப்டேட் செய்து கொள்கிறேன்..

    நன்றி..

    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  11. தேவயான தகவல் அளிதததற்கு நன்றி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press