Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

போலி ஈமெயில் முகவரிகளை சுலபமாக கண்டறிய - Email Verifier

நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் ஈமெயில் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர்.  ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஈமெயில் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்க்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறாக ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம், அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே நம்மிடம் போலியான ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம்.

இது போன்ற நேரத்தில் அந்த ஈமெயில் முகவரி சரியானதா இல்லை வேலைசெய்கிறதா, செயல் இழந்து விட்டதா என சுலபமாக கண்டறிய நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.

  • இதனை அறிந்து கொள்ள நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு எதவும் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள காலி கட்டத்தில் உங்கள் நீங்கள் பரிசோதிக்க வேண்டிய ஈமெயில் முகவரியை கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். 
  • நீங்கள் Verify Email பட்டனை அழுத்தியவுடன் கீழே நீங்கள் கொடுத்த ஈம்யில் முகவரி சரியானதா இல்லை போலியானதா என்ற முடிவு வரும். 
சரியாக இருந்தால் 


போலியானதாக இருந்தால் 

  • இவற்றை வைத்து தெரிந்து கொள்ளலாம் ஈமெயில் முகவரிகள் உண்மையானதா இல்லை போலியானதா என்று.
இந்த தளத்திற்கு செல்ல - http://www.verifyemailaddress.org/

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

  1. ரைட்டு...

    இனி கண்டுபிடிப்போம்ல...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்.. நானும் பயன்படுத்த போகிறேன்,,,

    ReplyDelete
  3. உபயோகமான பதிவு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ரொம்ப பயனுள்ள பதிவு...நன்றி...

    ReplyDelete
  5. ரொம்ப பயனுள்ள தகவல்

    வாழ்த்துக்கள்

    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  6. வணக்கம் அண்ணாச்சி,
    என் இன்ரநெட்டிற்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்க.
    வரும் வியாழன் தான் கனெக்சன் சரி பண்ணுவாங்களாம்.
    அதான் உங்கள் வலைக்கு வர முடியலை,
    மன்னிக்கவும்,

    உங்களுக்கும், உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் என் பிந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  7. உங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்கு சசி,நன்றி!!

    ReplyDelete
  8. பல பதிவர்களுக்கு, சிரமமின்றி ஈமெயில் அனுப்புவதற்கேற்ற அசத்தலான விளக்கப் பதிவு.
    பகிர்விற்கும், விளக்கத்திற்கும் நன்றி மச்சி.

    ReplyDelete
  9. ரொம்ப பயனுள்ள பதிவு
    அன்புடன்
    சக்தி

    ReplyDelete
  10. நல்ல தகவல்!
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  11. மிகவும் உபயோகமான பதிவு... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. ப்ளீஸ் தமிழ் ட்ய்பிங் எவ்வாறு இணைப்பது

    ReplyDelete
  13. மிக பயனுள்ள பகுதி இணைத்தமைக்கு நன்றிகள் ...

    ReplyDelete
  14. நீங்கள் ஒரு தமிழ் வலைதள வாத்தியார் உங்கள் பதிகள் மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. http://www.GreenAppleMail.com: இங்கே மின்னஞ்சல்களை சரிபார்க்க மற்றொரு சிறந்த சேவையாகும்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press