Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் Translate விட்ஜெட்டை தமிழ் வலைப்பூக்களில் இணைக்க #ட்ரிக்ஸ்

இந்த விட்ஜெட்டை நம்முடைய பிளாக்குகளில் இணைப்பதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து படிக்கலாம். இதனால் பல்வேறு மொழிகள் தெரிந்த அனைவருக்கும் நாம் பகிரும் தகவல் சென்றடையும். மொழி தெரியாமல் நம் பிளாக்கை படிக்காமல் விட்டு சென்றவர்களும் இனி எந்த வித பிரச்சினையுமின்றி அவர்களுக்கு தெரிந்த மொழியில் மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம். இதனால் நம் பிளாக்கின் வாசகர்கள் அதிகரிக்கவும் நல்ல வாய்ப்புள்ளது. 
  • கூகுள் இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் இந்த வசதியை கொண்டு வர Translate விட்ஜெட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் நம் வலைப்பக்கத்தின் மொழியை தேர்வு செய்யும் இடத்தில் தமிழ் மொழி இடம்பெற வில்லை. 
  • ஆதலால் தமிழ் மொழி வலைதளங்கள் இந்த வசதியை பெற முடியாமல் இருந்தது.
  • ஆனால் கோடிங்கில் சிறு மாற்றம் செய்தால் போதும் எந்த பிரச்சினையுமின்றி தமிழ் வலை தளங்களிலும் இந்த விட்ஜெட்டை இணைத்து கொள்ளலாம். 
பிளாக்கில் இணைக்க: 
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • Design-Add Gadget -Html JavaScript - சென்று மாற்றம் செய்யப்பட்டிருக்கும் கோடிங்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.  
<div id="google_translate_element"></div><script>
function googleTranslateElementInit() {
new google.translate.TranslateElement({
pageLanguage: 'ta',
layout: google.translate.TranslateElement.InlineLayout.HORIZONTAL
}, 'google_translate_element');
}
</script><script src="//translate.google.com/translate_a/element.js?cb=googleTranslateElementInit"></script>
  • அவ்வளவு தான் கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தி விட்டால் போதும் கூகுளின் Translate விட்ஜெட் உங்கள் பிளாக்கில் இனைந்து விடும். வாசகர்கள் அவர்களுக்கு தேவையான மொழிகளில் நம் பிளாக்கை மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம். 

டிஸ்கி: ஒருவேளை இந்த விட்ஜெட்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும், பின்பக்கம் நிறத்தை மாற்ற வேண்டும், எழுத்துரு அளவை மாற்ற வேண்டும் இப்படி ஏதாவது நினைத்தால் இந்த லிங்கில் Translate Widget சென்று மாற்றி கொள்ளுங்கள். முடிவில் கோடிங்கில் மட்டும் Page Language என்பதில் ta என்பதை தேர்வு செய்யவும்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

26 comments :

  1. இணைத்துவிட்டேன்..அருமையான விட்ஜெட்..நன்றி

    ReplyDelete
  2. ரைட்டு.... உன் நம்பர் என்னாச்சு சசி..

    ReplyDelete
  3. அனைத்து மொழியினரையும் படிக்கும் வசதியை ஏற்ப்படுத்தும் வாழ்த்துக்கள்...

    நல்ல தகவல்..

    ReplyDelete
  4. சூப்பர் சசி.. நானும் வச்சிட்டேன்..தேங்க்ஸ் :)

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள பதிவு சசி.

    ReplyDelete
  6. மிகவும் தேவையான பகிர்வு, நன்றி சசி

    ReplyDelete
  7. நல்ல தகவல் சசி... நன்றி...

    ReplyDelete
  8. இந்தியா தற்போது எங்கே இருந்து உயரும் பெரிய திறனை கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மலர்ந்துகொண்டிருக்கிறது போது, என்ன ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அது ஊக்கமூட்ட வேண்டும் ஒரிஜினாலிட்டி இல்லை, ரஜினி கூறுகிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
    http://bit.ly/n9GwsR

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  10. என் இரண்டு பிளாக்கிலும்
    இணைத்து விட்டேன்.நன்றி சசிகுமார்.

    ReplyDelete
  11. பயனுள்ள புதிய தகவலுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  12. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல், நன்றி.

    ReplyDelete
  14. நண்பா
    நீங்க கொடுத்த டிரான்ஸ்லேட் விட்ஜெட் வெச்சி மொழிபெயர்த்த என் பதிவை பாருங்க நண்பா....
    அவ்வ்வ்வ்வ்வ்

    translate version:

    Pativulakattula our many poetry contests, short story competition, the Social Awareness pottinu many matches are in progress. But the kalantuka you can win a kavinaravo eluttalaravo iruntattan.

    But a rival our terarkummi completely different. Kamla going to happen. It's great to arivaliyavo you, do not need to be terincavaravo literature. If some smart thinking, however, bestowed kukulantavar give you answers.

    Original version:

    நம்ம பதிவுலகத்துல எத்தனையோ கவிதை போட்டிகள், சிறுகதை போட்டி, சமூக விழிப்புணர்வு போட்டினு பல போட்டிகள் நடந்து இருக்கு. ஆனா இதில் கலந்துக நீங்க ஒரு கவிஞராவோ எழுத்தாளராவோ இருந்தாத்தான் வெற்றி பெற முடியும்.

    ஆனா முற்றிலும் வித்தியாசமான ஒரு போட்டிய நம்ம டெரர்கும்மி.காம்ல நடத்த போறாங்க. இதுக்கு நீங்க பெரிய அறிவாளியாவோ, இலக்கியம் தெரிஞ்சவராவோ இருக்கனும்னு அவசியம் இல்லை. கொஞ்சம் smart thinking இருந்தா போதும், கூகுளாண்டவர் உங்களுக்கு விடைகளை அள்ளி தருவார்.

    ReplyDelete
  15. நன்றி நண்பரே

    இணைத்து விட்டேன்

    தொடரட்டும் ஆராய்ச்சிகள்

    நட்புடன்
    சம்பத்

    ReplyDelete
  16. நன்றி அருமையான பதிவு

    ReplyDelete
  17. நல்ல தகவல்.....நல்ல தகவல்........

    ReplyDelete
  18. நன்றி நண்பரே
    எனது தளத்திலும் வைத்து விட்டேன் .

    அருமை .
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. தமிழ் மணம் 13

    ReplyDelete
  20. நல்ல தகவல்!
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  21. எனது தளத்திலும் இணைத்துவிட்டேன் நன்றி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press