Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஆன்லைனில் கண்களின் பார்வை திறனை இலவசமாக பரிசோதிக்க

எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் புற்றீசல் போல உருவாகின்றன. இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணினி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஆன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம் என இங்கு பார்க்கலாம்.

கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடித்து ஆன்லைன் பரி சோதிப்போம் வாருங்கள்.

  • உங்கள் கணினி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும். 
  • உங்கள் கணினியில் Flash Player இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். 
  • அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள் கொடுக்க பட்டிருக்கும். 
  • அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு பகுதி தெரியும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்கள் கணினி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கணினி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும். 
  • அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.
  • ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே சாலச்சிறந்தது.
டுடே லொள்ளு 


அய்யோ என்னடா அது!! நமக்கு ஏன் வம்பு அதுவா வெளிய வரட்டும். அப்புறமா போய் ஆட்டைய போடுவோம் 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

  1. நல்ல வேல கண்ணுக்கு கண்ணாடி வேணாமுன்னு சொல்லிட்டாங்க நன்றி மாப்ள!

    ReplyDelete
  2. வணக்கம் சகோ,
    பயனுள்ள ஒரு விடயத்தை, நேரத்தை மீதப்படுத்தி வீட்டிலிருந்தே ஐ டெஸ்ட்டிங் பண்ணக் கூடிய வகையில் பகிர்ந்திருக்கிறீங்க.

    நன்றி!

    ReplyDelete
  3. மொதல்ல இந்த ட்விட்டர் குருவிய ஒரு ஓரமா கட்டி வையுங்க... எங்க போனாலும் பின்னாடியே வந்து தொல்ல குடுக்குது...

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி. இணைய உலகில் இல்லாத விசயங்களே இல்லை போல....

    ReplyDelete
  5. இணையத்துக்குள் எல்லாம் அடங்கி விட்டது...

    நல்ல தேவையான செய்தி..

    நன்றிகள்...

    ReplyDelete
  6. அருமை. இம்மாதிரி தகவல்களை பகிருங்கள் தொடர்ந்து. நன்றி.

    ReplyDelete
  7. நல்ல பதிவு , அனைவருக்கும் உபயோகமானது .

    ReplyDelete
  8. இதெல்லாம் கூட இணையத்தில் வந்துவிட்டதா ஆச்சரியம் தான்

    ReplyDelete
  9. hi sasi
    what is google news badges

    ReplyDelete
  10. அற்புதம் சசி சார்,

    மிக உபயோகமான தகவல்..

    நான் உடனடியாக உபயோகித்துப் பார்த்து
    வீட்டில் உள்ளவர்களையும் பரிசோதித்துப்
    பார்த்து திருப்தியடைந்தேன்.

    மிக மிக பயனுள்ள தகவல்.

    நன்றிகள் பல..

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  11. நல்ல பதிவு , அனைவருக்கும் உபயோகமானது .

    ReplyDelete
  12. இதுக்கெல்லாம் கூட இணைய வசதியிருக்கா!!!


    பயனுள்ள பதிவு சசி.

    ReplyDelete
  13. மச்சி உன் போன் வேலை செய்யல அதை பார் முதல்ல..

    ReplyDelete
  14. நன்றிங்க.பயனுள்ள பதிவு

    http://gokulmanathil.blogspot.com

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press