ஒரே நிமிடத்தில் அழகான HTML Comparison Table உருவாக்க

இரண்டு பொருளுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை காட்டுவதற்கும், அல்லது இரண்டு இடத்திற்கு உள்ள வித்தியாசங்கள் காட்டவும் நமக்கு பயன்படுவது இந்த Comparison Table ஆகும். அழகான Comparison Table உருவாக்க இதுவரை போட்டோஷாப் மென்பொருளையே பெரும்பாலும் உபயோகிக்க படுகிறது. ஆனால் இன்று நாம் ஒரு சுலபமான முறையில் comparison table உருவாக்குவது எப்படி பார்ப்போம். இதற்க்கு கோடிங் எழுத வேண்டிய அவசியமில்லை ஒரே நிமிடத்தில் அதை உருவாக்கி விடலாம். எந்த தொழிநுட்ப அறிவும் பெற்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கீழே உள்ள Comparison Table பாருங்கள்.

தமிழ் பதிவர்கள் vs ஆங்கில பதிவர்கள்



தமிழ் பதிவர்கள்
ஆங்கில பதிவர்கள்
பதிவின் தரம்
நட்பு
வருமானம்
வாசகர்களை மதித்தல்
தொடர்ந்து பதிவிடல்
பதிவர்கள் சண்டை
பதிவர்கள் ஒற்றுமை
This table was created with Compare Ninja.

Comparison Table உருவாக்குவது எப்படி?
  • முதலில் இந்த Compare Ninja தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். பிறகு Home பகுதிக்கு சென்று START NOW என்ற பட்டனை அழுத்தவும். 
  • முதலில் உங்கள் டேபிளின் தலைப்பை கொடுத்து மற்ற விவரங்களை கொடுக்கவும்.
  • Next பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் Table தோற்றத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
  • தேர்வு செய்த பின்னர் Next பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு Table பக்கம் ஓபன் ஆகிவிடும். அதில் உங்களுக்கு விருப்பமான டேபிளை உருவாக்கி கொள்ளுங்கள். 
  • Comparison Table உருவாக்கியவுடன் கீழே உள்ள Show Me The Code என்ற பட்டனை அழுத்தினால் உங்களின் டேபிளுக்கான HTML மற்றும் CSS கோடிங்க வந்திருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை காப்பி செய்து உங்கள் வெப்சைட்டில் இணைத்து கொள்ளுங்கள்.

இதே போன்று நீங்கள் எத்தனை Comparison Table வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம். 

கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments