யூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய

இணையத்தில் வீடியோக்களை காண பல தளங்கள் இருந்தாலும் யூடியுப் தளம் தான் இதில் சிறந்தது. இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.  சில சமயங்களில் நாம் ஏதேனும் வீடியோவை பார்க்கும் பொது அந்த வீடியோவில் உள்ள பாடலோ அல்லது வசனமோ நமக்கு மிகவும் பிடித்து இருக்கும். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இந்த வேலையை சிறப்பாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.


இன்ஸ்டால் செய்யும் முறை:
  • முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து இந்த இலவச மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • டவுன்லோட் செய்தவுடன் வரும் செட்டப் பைலை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • படத்தில் குறிப்பிட்டதை போல தொடர்ந்து செய்யவும்.
  • மேலே படத்தில் உள்ளதை போல அந்த இரு கட்டத்தில் உள்ள டிக் குறியை நீக்கி விட்டு Next பட்டனை க்ளிக் செய்தால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில்இன்ஸ்டால் ஆகி விடும். 

பயன்படுத்தும் முறை:
  • இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
  • அதில் மேலே உள்ள காலி இடத்தில் நீங்கள் ஆடியோ டவுன்லோட் செய்ய விரும்பும் யூடியுப் வீடியோவின் URL கொடுக்கவும்.
  • படத்தில் காட்டியுள்ள இடத்தில் URL கொடுத்து கீழே உள்ள Download பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த வீடியோவில் இருந்து ஆடியோ மட்டும் தனியே டவுன்லோட் ஆகும். 
  • இந்த பைல் டவுன்லோட் ஆகி முடிந்தவுடன் கீழே இருப்பதை போல செய்தி வரும். 
  • அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான ஆடியோ பைல் உங்கள் கணினியில் சேமிக்க பட்டிருக்கும்.


டுடே லொள்ளு 
என்ன கூடை கூடையாக பணத்தை கொடுத்தாலும் என் ஓட்டு உங்க  கைக்கு எதிராக தான். 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments