இணையத்தில் கூகுள் தளத்தை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இணையத்தில் கொட்டிகிடக்கும் தகவல்களில் நமக்கு தேவையானதை நொடிபொழுதில் தேடி நமக்கு கொடுக்கும் மிக சிறந்த பணியை இந்த தேடியந்திரங்கள் செய்கிறது. அதிலும் கூகுளில் செயல்பாடு பிரம்மிக்க வைக்கிறது. ஒருவேளை இந்த தேடியந்திரங்கள் இல்லை என்றால் நம்முடையை நிலைமையை யோசித்து பாருங்கள். என்ன நினைத்து பார்க்கவே மிகவும் கஷ்ட்டமாக இருக்கு அல்லவா. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கூகுள் தேடியந்திரத்தில் தேடும் போது சில யுத்திகளை கையாண்டால் நாம் தேடுவதை சுலபமாக பெறலாம்.
என்னுடைய வந்தே மாதரம் தளத்தில் இருந்து பிளாக்கர் சம்பந்தமான பதிவுகளை தேட விரும்புகிறீர்கள் என வைத்து கொள்வோம். அதற்க்கு நீங்கள் கீழே இருப்பதை போல கொடுக்கவேண்டும்.
இப்படி கொடுத்து கூகுளில் தேடினால் இந்த வந்தேமாதரம் தளத்தில் இருந்து மட்டும் பிளாக்கர் சம்பந்தமான முடிவுகள் தங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இனி இந்த முறியை பயன்படுத்தி நமக்கு தேவையானதை மிக சுலபமாக தெரிந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இணையத்தில் உள்ள ஏராளமான தளங்களில் நமக்கு பிடித்த தளங்கள் என்று சில தளங்கள் இருக்கும். நாம் கூகுள் தேடலில் நாம் தேடி கொண்டிருக்கும் போது முடிவுகளை அந்த குறிப்பிட்ட தளத்தில் இருந்து மட்டும் பெற நினைப்போம். அப்படி வரவைக்கும் வசதியும் கூகுளில் உள்ளது.
- முதலில் இந்த லிங்கில் சென்று கூகுள் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- அதில் முதலில் நீங்கள் தேட விரும்பும் குறிச்சொல்லை கொடுத்து பின்னர் Site: என்று கொடுத்து நீங்கள் முடிவுகளை பெற விரும்பும் தளத்தின் பெயரை குறிப்பிடவும்.
என்னுடைய வந்தே மாதரம் தளத்தில் இருந்து பிளாக்கர் சம்பந்தமான பதிவுகளை தேட விரும்புகிறீர்கள் என வைத்து கொள்வோம். அதற்க்கு நீங்கள் கீழே இருப்பதை போல கொடுக்கவேண்டும்.
பிளாக்கர் Site:vandhemadharam.blogspot.com
- இதே முறை படங்களை தேடுவதற்கும் பொருந்தும்.
டுடே லொள்ளு
இது மட்டும் முன்னாடியே கிடைச்சிருந்தா அந்த சிங்களன ஒருத்தன் விடாம சுட்டு தள்ளி இருப்பேன்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments