4/07/2011

பயர்பாக்ஸ்4 புதிய வசதி- நீட்சிகளின் வேகத்தை அறிய

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு அடுத்து அதிகமாக உபயோகப்படுத்த படும் பிரவுசர் மொசில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் ஆகும். தற்போது இதன் புதிய பதிப்பான பயர்பாக்ஸ் 4 வெளியிட்டு உள்ளார்கள். இருக்கும் எல்லாம் பிரவுசர்களின் ஒரே பிரச்சினை வேகம் தான் இதில் எது சிறப்பாக செயல்படுகிறதோ அந்த மென்பொருள் தான் அதிகமாக விரும்ப படுகிறது. பிரவுசர்களில் இல்லாத சில வசதிகளை பெற நாம் நீட்சிகளை உபயோகிக்கிறோம். இது ஒரு அளவிற்கு இருந்தால் பராவாயில்லை நம்முடைய கணக்கில்லாமல் நீட்சிகளை நம் கணினியில் சேர்த்து கொள்கிறோம்.இதனால் தான் பிரச்சினையே சில மூன்றாம் நபர் நீட்சிகளை உபயோகிப்பதால் நம்முடைய பிரவுசரின் வேகம் பாதிக்கபடுகிறது.
  • இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டும் வகையிலே பயர்பாக்ஸ் தற்போது பயர்பாக்ஸ் திறக்கும் பொது தாமதமாகும் நீட்சிகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 
  • இந்த நீட்சிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது Foxlingo எனப்படும் நீட்சியாகும். இது தான் அதிக நேரம் எடுத்துகொள்வதாக பயர்பாக்ஸ் அறிவித்துள்ளது.
  • இதில் எது அதிக சதவீதம் காட்டுகிறதோ அந்த நீட்சி தான் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது.


  • இதுபோல சுமார் 50 நீட்சிகளின் பெயர்கள் பட்டியலில் வெளியிட்டு உள்ளார்கள். 
  • இனி பயர்பாக்ஸ் உபயோகிப்பாளர்கள் இந்த பட்டியலில் அதிக சதவிகிதத்தை உடைய நீட்சியை தவிர்த்தல் உங்கள் பிரவுசரை வேகமாக்கலாம். 
  • இதன் முழு பட்டியலையும் பார்க்க இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.

டுடே லொள்ளு 

சனியனே விழுந்தாவது தொலையேன் கொஞ்ச நேரம் உட்காருகிறேன், எவ்ளோ நேரம் தான் இப்படியே ஆடிகிட்டு இருப்பது.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். நேரமிருந்தால் இந்த விளம்பரங்களிலும் க்ளிக் செய்யவும்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home