Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

மனிதனாக பிறந்த ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை தேர்தலில் வாக்களிப்பது. தேர்தலில் வாக்களிக்க நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் ஓட்டு போட முடியாது. (என்னது! பெயர் இருந்தும் ஓட்டு போட முடியலையா அதுக்கு நான் பொறுப்பில்ல.. வாழ்க ஜனநாயகம்). ஆனால் நம்முடைய அரசு அதிகாரிகளை பற்றி தான் நமக்கு தெரியுமே ஒருத்தன் பேரு சரியா இருந்தா அவுங்க அப்பா பேரு மாறி இருக்கும் அல்லது இரண்டுமே சரியாக இருந்தா அவனுடைய போட்டோ மாறி இருக்கும் அல்லது 20 வயது இருக்கிறவனுக்கு 80 வயது போட்டுருப்பாங்க இதெயெல்லாம் மிஞ்சும் வகையில் உயிரோட இருக்கிறவன சாக கூட அடிச்சுடுவாங்க இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.
இதை எல்லாம் மீறி நம்முடைய விவரங்கள் சரியாக வந்தால் அந்த நீங்க அதிச்ட்ட சாலி தான். ஆனால் முன்பை போல் இல்லாமல்  இப்பொழுது இந்த பிழைகள் மிகவும் குறைந்து விட்டது. நன்றி - அரசு தேர்தல் துறை.

நம்முடைய வாக்காளர் பட்டியல் அடிக்கடி புதிப்பிக்க படும். இப்படி புதிப்பிக்கும் பொழுது ஏற்கனவே பட்டியலில் இருந்த பெயர்கள் விடுபட்டு போவது வாடிக்கையாக உள்ளது. இப்பொழுது புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் மற்றும் நம் குடும்ப உறுப்பினர்களின் பெயர் போன்றவை இருக்கிறதா இல்லை விடுபட்டுள்ளதா என ஆன்லைனில் சுலபமாக கண்டறியும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதில் எப்படி உங்களுடைய பெயர் இருக்கிறதா என பரிசோதிக்க கீழே உள்ள வழிமுறையை பயன் படுத்தவும்.
 • இந்த தளத்திற்கு சென்றவுடன் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 • மேலே உங்களுடைய மாவட்டத்தையும் பிறகு தொகுதியையும் தேர்வு செய்து கொள்ளவும். (தமிழிலேயே இருப்பதால் விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.)
 •  இதில் நான்கு வகைகளில் உங்களுடைய விவரங்களை தேடும் வசதியை கொடுத்து உள்ளனர். அதில் இரண்டாவது வசதியான வாக்காளரின் பெயர் மூலமாக தேடவும் என்ற வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.
 • அடுத்து கீழே உள்ள சமர்பிக்க என்ற பட்டனை அழுத்தவும். 
 • மேலே படத்தில் இருப்பதை போல தமிழில் உங்களுடைய பெயரையும், உங்களின் குடும்ப தலைவரின் பெயரையும் கொடுக்க வேண்டும்.
 • தமிழில் டைப் செய்ய அவர்கள் கொடுத்துள்ள தமிழ் கீபோர்ட் வசதியையும் பயன்படுத்தலாம் அல்லது Google Tamil Input வசதியை பயன்படுத்தி டைப் செய்யலாம். 
 • அடுத்து கீழே கொடுத்துள்ள சமர்பிக்க என்ற பட்டனை அழுத்தவும். பின்பு உங்களின் தொகுதியில் இதே விவரங்கள் பொருந்தும் நபர்களை உங்களுக்கு காட்டும். 

 • இதில் எது உங்களுடையதோ அந்த பெயரில் கிளிக் செய்து சென்றால் உங்கள் குடும்ப உறுப்பினர்களை (உடன் பிறந்தோர்) காட்டும். 
 • இது போன்று எத்தனை தடவை வேண்டுமானாலும் தேடி கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல - Voter list Search Engine

டிஸ்கி: இந்த வாக்காளர் பட்டியல் 1.1.2011 அன்று தேர்தல் அலுவலகதால் வெளியிடப்பட்டது. 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

21 comments :

 1. என்னுடைய பேயரை தேடிப்பார்க்கிறேன்..

  இருந்தான் வந்து ஓட்டுப்போடுவேன்...

  ReplyDelete
 2. அறியவேண்டிய பகிர்வு .
  பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
 3. பதிவு அருமை மாப்ள நன்றி

  ReplyDelete
 4. ரொம்ப நேரம் தேடியும் இந்திய வாக்களர் பட்டியலில் இருந்தே என் பெயர் தொலைந்து போயிருக்கிறது...

  இதை சட்டபூர்வமாக சந்திக்கிறேன்...

  வாக்காளர் பட்டியலில் என் பெயர் காணமல் போனதற்க்கு காரணமாணவர்கள் என்று நான் கருதுபவர்கள்...
  சிபி செந்தில்குமார்
  வேடந்தாங்கல் கருன்
  பண்ணிகுட்டி ராமசாமி
  நிருபன்
  தமிழ்வாசி பிரகாஷ்
  விக்கியுலகம்
  உணவு உலகம்
  நாஞ்சில் மனோ
  ராஜபாட்டை ராஜா
  கோமாளி செல்வா
  சென்னை பித்தன்

  மேற்கண்ட இவர்கள் மீதுதான் எனக்கு பெருத்த சந்தேகம் உள்ளது...

  விரைவாக ஒத்துக்கொள்ளுங்கள்..
  தண்டைகள் குறை வாய்ப்பிருக்கிறது..

  ReplyDelete
 5. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், அப்பெயரை பட்டியலில் சேர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?

  ReplyDelete
 6. adutha therthal seekkirama varuthaa? adutha therthal seekkirama varuthaa?

  ReplyDelete
 7. வளைச்சு வளைச்சு மேட்டர் கலெக்‌ஷன்

  ReplyDelete
 8. தமிழ் மணம் மூணு

  ReplyDelete
 9. தேடி பார்த்தேன் என் பெயர் இருந்தது .

  நன்றி நண்பரே பகிர்வுக்கு

  ReplyDelete
 10. பெயர் திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

  ReplyDelete
 11. நன்றி நண்பரே எனது பெயரும் உள்ளது

  வணக்கத்துடன்
  சம்பத்

  ReplyDelete
 12. நன்றி நண்பா தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 13. தேடிப்பார்த்தேன் நண்பரே... என்ன கொடுமையிது என் பேரு வேற அட்ரஸ்ல இருக்குது.. என்ன கொடுமை சார்

  ReplyDelete
 14. நச்சுன்னு போட்டுருக்கீங்க ஒரு பதிவு , சபாஷ்,பாராட்டுக்கள்,

  இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  ReplyDelete
 15. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

  அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

  அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 18. பயனுள்ள அருமையான தகவல்

  Without Investment Data Entry Jobs !

  http://bestaffiliatejobs.blogspot.com

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press