யூடியுப் வீடியோக்களை HD வடிவில் டவுன்லோட் செய்ய

இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும், நீட்சிகளும் உள்ளன. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் இந்த மென்பொருள் சற்றே வித்தியாசமானதும், பயனுள்ளதும் கூட. இந்த மென்பொருள் மூலம் ஒரு குறிப்பீட வீடியோவை பல அளவுகளில் பல பார்மட்டுகளில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மற்றும்இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக தொடர்பு வீடியோக்களை யூடியுப் தளத்திற்கு செல்லாமலே இங்கிருந்தே டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
மென்பொருளின் பயன்கள்:
  • ஒரே நேரத்தில் பல வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
  • முற்றிலும் இலவசமான மென்பொருள்.
  • தொடர்பு வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் யூடியுப் தளத்திற்கு செல்ல தேவையில்லை.
  • வீடியோக்களை வேகமாக டவுன்லோட் செய்கிறது.
  • வீடியோக்களை FLV,MP4 பார்மட்களில் பல்வேறு அளவுகளில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • வீடியோக்களை Preview பார்க்கும் வசதி இருப்பதால் வீடியோ நன்றாக இருந்தால் மட்டுமே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • யூடியுப் வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் தனியே பிரிக்க Extract FLV audio வசதி.
  • மேலும் History, Batch போன்ற கூடுதல் வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது.
பயன்படுத்தும் முறை:
  • முதலில் இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அடுத்து மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • மென்பொருளில் Youtube URL இடத்தில் வீடியோவின் URL கொடுக்கவும். 
  • URL கொடுத்தவுடன் அந்த வீடியோவின் டவுன்லோட் செய்ய வேண்டிய தரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • குறிப்பிட்ட வீடியோ HD வடிவில் இருந்தால் மட்டுமே HD வடிவில் டவுன்லோட் செய்ய முடியும் இல்லையேல் சாதரணமாக தான் டவுன்லோட் ஆகும்.
  • அடுத்து Preview பார்க்க வேண்டுமென்றால் பார்த்து கொண்டு கடைசியில் டவுன்லோட் பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் அந்த வீடியோ உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும்.
  • வலது புறத்தில் பார்த்தல் இந்த வீடியோவின் Related videos காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் செய்ய நினைத்தால் அதன் மீது கிளிக் செய்தாலே போதும்  போதும் அந்த வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • ஒரே நேரத்தில் பல வீடியோக்களை டவுன்லோட் செய்யும் பொழுது டவுன்லோடின் வேகம் இணைய வேகத்திற்கு ஏற்ப குறையும். 
இனி நீங்கள் எந்த வீடியோவை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

மென்பொருளை டவுன்லோட் செய்ய - Youtube HD Transfer


Comments