9/11/2011

மொபைலுக்கு விதவிதமான ரிங்டோன்கள் உருவாக்க Free Ringtone Maker Portable

மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு மொபைல் போன்கள் இருப்பதை காண முடிகிறது. ஒருசிலரை அவர்களின் மொபைல் போன்களில் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை ரிங்டோனாக வைத்து கலக்குவார்கள். அது போன்று நீங்களும் வைக்க வேண்டும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா உங்களுக்காக ஒரு புதிய இலவச மென்பொருள் உள்ளது.
  • இதற்க்கு கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • இதை நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம். 
  • இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள் கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Choose a Song from Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள். 
  •  அந்த பட்டனை கிளிக் செய்து நீங்கள் ரிங் டோனாக மாற்ற வேண்டிய பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் ரிங்டோனாக உருவாக்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்வு செய்து கொண்டு Next என்ற பட்டனை அழுத்தவும். 
  •  அடுத்து உங்களுடைய ரிங்டோன் சேமிக்க வேண்டிய இடத்தை கேட்கும் அதை தேர்வு செய்து விட்டால் போதும் அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய ரிங்டோன் ரெடியாகிவிடும். 
  •  இதே முறையில் உங்களுக்கு பிடித்த விதவிதமான ரிங்டோன் உருவாக்கி உங்கள் மொபைலில் உபயோகியுங்கள்.
டவுன்லோட் - Free Ring tone Maker Portable

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஒட்டு பட்டன்களில் உங்கள் ஓட்டினை போட்டு செல்லுங்கள்.

Tech Shortly

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home