மொபைல் போன்களில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும். இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும். உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இந்த பிரவுசரை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
- இணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.
- Multi Tabs வசதி.
- மிகச்சிறந்த தேடியந்திரம்
- மிகச்சிறந்த டவுன்லோட் மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.
- மெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.
- Bookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.
- பிரவுசரில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
- இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம்.
மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.
Download Links
மொபைல் மூலமாக டவுன்லோட் செய்ய - http://wap.ucweb.com/
- for Android mobiles - Download link
- for Symbian mobiles - Download link
- for Java mobiles - Download link
- for Windows mobiles - Download link
- for Blackberry mobiles - Download link
- for Iphone - Download link
- for Other mobiles - Download link
மொபைல் மூலமாக டவுன்லோட் செய்ய - http://wap.ucweb.com/
Comments