Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

BSNL மலிவு விலை டேப்லெட் கணினி வாங்கலாமா, வேண்டாமா?

இந்தியாவில் விலை குறைவாக கொடுக்கும் பொருட்களுக்கு கிராக்கி அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. முதலில் ஆகாஷ் டேப்லெட் வருதுன்னு பீதிய கிளப்பினாங்க சொல்லி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் வந்த பாடில்லை. அடுத்து இந்த வரிசையில் BSNL கம்பெனியும் குறைந்த விலை டேப்லெட் கணினிகளை அறிமுக படுத்தியது. சரி நாமும் ஒன்னும் வாங்குவோமேன்னு ஒன்னு புக் பண்ணி வாங்கியும் விட்டேன். இதுல எனக்கு பிடிச்ச சில விஷயங்களையும், பிடிக்காத விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பிடித்தவைகள்:

 • சாதரணமாக சிறிய ஆன்ட்ராய்ட் போன்களே குறைந்தது ஐந்து ஆயிரத்திற்கு மேல் விற்கும் பொழுது 7" திரை உடைய ஆன்ட்ராய்ட் டேப்லெட் கணினிகளை வெறும் Rs. 3500 க்கு கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம். 
 • ஆன்ட்ராய்ட் வகை என்பதால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான கேம்கள், மென்பொருட்களை டவுன்லோட் செய்யலாம்.
 • Battery Capacity நல்லா இருக்கு. நான் தொடர்ந்து உபயோகிக்கல அதானால் ரெண்டு நாளைக்கு ஒரு முறை தான் சார்ஜ் போட வேண்டிய அவசியம் இருக்கு. 
 • Wi-Fi மூலமா இணையம் வேகமாக இயங்குகிறது.  டவுன்லோடிங் ஸ்பீடும் பரவாயில்ல. 
பிடிக்காதவைகள்:
ரூபாய் மூவாயிரத்து ஐநூறு கொடுத்துட்டு ஆப்பிள் ஐபேட் ரேஞ்சுக்கு வசதிகள் இருக்கும்னு எதிர்பார்த்தா தப்பு ஆனால்
 • பணம் கட்டி ரெண்டு நாளுக்குள் அனுப்பிடுரோம்னு சொல்லிட்டு (தொடர் மெயில் தாக்குதலினால்) ஒரு மாதம் கழிச்சு தான் வந்துச்சு.
 • BSNL ஆபர் சிம்கார்ட் தரேன்னு சொல்லி காசு வாங்கிட்டு அந்த சிம்கார்டே அனுப்பல. அதனால் Rs.250 எனக்கு நஷ்டம். 
 • ஆன்ல இருக்கும் பொழுது சார்ஜ் போட்டால் பயங்கர சூடாகுது. அதுல ஒரு சமையலே முடிச்சுடலாம் போல. ஆப் பண்ணி சார்ஜ் போட்டா சூடாகாதான்னு நெனக்காதிங்க அப்பவும் ஆகுது பாதி சமையல் செய்யலாம். 
 • USB போர்ட் இல்ல அதனால நேரடியா பென்டிரைவ் போட முடியாது. அடாப்டர் வச்சு தான் இணைக்க முடியும்.
 • HDMI போர்ட் கேபிள், ஹியர் போன் ஆகியவைகள் இல்ல நாமதான் வாங்கிக்கணும்.
 • பத்து நிமிஷம் யூஸ் பண்ணாலே டேப்லெட் சூடாகிடுது. 
 • இதையெல்லாம் விட செம கடுப்பான விஷயம் 2GB inbuilt மெமரி தரேன்னு சொல்லிட்டு வெறும் 800MB தான் இருந்துச்சு. 
 • சவுண்ட் கிளாரிட்டி பரவாயில்ல, பிக்சர் கிளாரிட்டிபரவாயில்ல, வீடியோ கிளாரிட்டி பரவா இல்ல இப்படி பரவாயில்லைகள் தான் நிறைய உள்ளன.
 • கேமரா சும்மா பேச்சுக்காக... பயங்கர கருப்பா இருக்கிற என்னை கருப்பா பயங்கரமா காட்டுது...

இதுல எதையாவது விட்டுட்டேனா தெரியல நண்பர்கள் சந்தேகம் இருந்தால் கருத்துரையில் கேட்கவும்.

வாங்கலாமா வேணாமா?

எனக்கு பிடிச்சதும் பிடிக்காததும் சொல்லிட்டேன் இனி வாங்கலாமா வேணாமா என்பதை முடிவு எடுக்க வேண்டியது நீங்க தான். ஆனால் என் நண்பன் ஒருவன் வாங்கி இருக்கான் அதுல 2GB மெமரி சரியா இருக்கு ஆதலால் எல்லாமே இது போல் தான் இருக்கும் என்றும் கூற முடியவில்லை.

மூவாயிரத்து ஐநூறு பெரிய விஷயம் இல்லை என்பவர்கள் தாராளமாக வாங்கி கொள்ளுங்கள். இத வாங்குறத விட இன்னும் மூவாயிரம் அதிகம் போட்டு மைக்ரோமேக்சின் funbook டேப்லெட் வாங்கி கொள்ளலாம்  என்பது என் கருத்து.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

 1. ஒரு ஆர்வத்தில BSNL மானிய விலையில் கொடுத்த penta T-Pad IS701R என்ற மாடல் டேப்ளட்டை ஆன்லைன் மூலம் பனம் கட்டி வாங்கி தொலைத்தேன். அவர்களும் அனுப்பி இரண்டு வாரம் ஆச்சு. இன்னைக்கு வரையில் அதை ஓப்பான் செய்யவே முடியல.... நானும் நொய்டாவிற்கு ஈமெயில் அடித்தும் கேட்டுவிட்டேன். பதில் இல்லை. கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றாலும் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்துவிட்டு கட் செய்து விடுகிறார்கள். மீண்டும் கடுப்புடன் தயவு செய்து என் டேப்ளட்டை மாற்றி தார்ங்கள். அல்லது என் பணத்தை ரீ-ஃபண்ட் செய்துவிடுங்கள் என்று கூட மெயில் அனுப்பி பார்த்துவிட்டேன். ம்...ஹூம்... அசைந்து கொடுப்பது போல் தெரியவில்லை. ஏண்டா இந்த சனியனை வாங்கினோம் என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. இந்த penta T-Pad சர்வீஸ் செண்டர் ஏதாவது சென்னையில் இருக்கான்னு தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். அல்லது வேறு ஏதாவது மாற்று வழி இருந்தாலும் சொல்லுங்கள் நண்பர்களே.....

  ReplyDelete
  Replies
  1. அதுலையே ஓபன் பண்றதுக்கு லாக் மாதிரி இருக்கும் அதுல தொட்டா ஓபன் ஆகும். சர்வீஸ் சென்டர் தாம்பரம் , அண்ணா நகர் ல இருக்கு. வெப்ல முகவரி இருக்கு.

   Delete
 2. ஒரு பொருளை ஆன்லைனில் வாங்கும் போது சில பிரச்சனைகளை சந்திப்பது தவிர்க்க இயலாததாகிறது.

  ReplyDelete
 3. பரவாயில்லை நண்பா.

  தங்கள் அறிவுறுத்தல்கள் மிகவும் பயனுள்ளவை.

  ReplyDelete
 4. //கேமரா சும்மா பேச்சுக்காக... பயங்கர கருப்பா இருக்கிற என்னை கருப்பா பயங்கரமா காட்டுது...//

  apo naa laaaam?

  ReplyDelete
 5. மைக்ரோ மாக்ஸ் டேப் யும் அந்த அளவுக்கு இல்லை, கொஞ்சம் பொறுத்து நல்லதா தான் வாங்கணும்.

  மெர்க்குரி ஒரு டேப் போட்டு இருக்கான், இன்னும் சந்தைக்கு வந்து சேரலைனு நினைக்கிறேன். கான்பிகரேஷன் நல்லா இருக்கு போல தெரியுது.

  ReplyDelete
 6. நண்பரே உங்கள் தளம் கல்வி தொடர்புடையது. அதனால் நீங்கள் உங்கள் தளத்தில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடலாமே!

  தேர்வு முடிவுகள் வெளியிட லிங்க் http://www.muruganandam.in/2012/05/tamilnadu-10th-results-2012-10th.html

  ReplyDelete
 7. நன்றிதெளிவு படுத்தியமைக்காக/

  ReplyDelete
 8. நானும் ஆகஷ் டேப்லெட் மற்றும் BSNL TABLET இரண்டிற்கும் ஆன்லினில் அப்ளை செய்து காத்திருந்ததுதான் மிச்சம் நல்லவேளை நான் தப்பினேன் என்று தங்களின் பதிவின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

  ReplyDelete
 9. கூகுள்" தரும் தகவல் வகைப்படுத்தல் - http://mytamilpeople.blogspot.in/2012/05/google-introducing-knowledge-graph.html

  ReplyDelete
 10. tablet PC market is only at the starting stage atleast one has to wait 2 years to get a good one

  ReplyDelete
 11. malaysia vil vangga mudiyuma??

  ReplyDelete
 12. "சூப்பர் டூப்பர் டேப்ளட் பிசி" ன்னு சொல்லுங்க..

  ங்கொய்யால.. ஏழு ரூபாய்க்கு ஏரோப் ப்ளான் வாங்கிட்டு அதை ஆகாயத்தில பறக்கலேன்னு சொல்ற மாதிரி இருக்கு.

  ReplyDelete
 13. விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 14. நல்லா தெளிவான விளக்கம் சார் ,நான் தப்பிச்சேன்

  ReplyDelete
 15. நல்லவேளை நான் தப்பினேன்

  ReplyDelete
 16. நல்லவேளை நான் தப்பினேன்

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press