குரோமில் Sign in to Chrome வசதியை பயன்படுத்துவது எப்படி, பயன்கள் என்ன?

மிக வேகமான வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கும் இணைய உலவி கூகுல் குரோம். இப்பொழுது IE உலவியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து உள்ளதாக Stats Counter அறிவித்து உள்ளது. இதில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் பெரும்பாலானவர்கள் கூகுள் குரோமை பயன்படுத்து கின்றன. இதில் உள்ள வசதிகளில் முக்கியமான வசதியான Sign in to Chrome வசதியை பற்றி இன்று காணலாம்.
நீங்கள் உங்கள் அலுவலகத்திலும், வீட்டிலும் குரோம் உலவியை உபயோகித்தால் இந்த இரண்டு இடத்தில உள்ள உலவிகளையும் ஒன்றாக இணைப்பது தான் Sign into Chrome வசதி. உதாரணமாக அலுவலகத்தில் உள்ள உலவியில் முக்கியமான இணைய பக்கங்களை புக்மார்க் செய்து வைத்து உள்ளீர்கள் என வைத்து கொள்வோம். உங்கள் வீட்டு கணினியில் புக் மார்க் இல்லாததால் தேடியந்திரத்தில் அந்த தளங்களை தேடி தேடி அலுத்து போய்விட்டீர்களா? இது போன்ற தருணத்தில் உதவுவது தான் Sign into Chrome வசதி.

Sign into Chrome வசதியின் பயன்பாடுகள்:
 • ஒரு உலவியில் இணைக்கப்பட்டுள்ள புக்மார்க்ஸ், நீட்சிகள், ஹிஸ்டரி, மென்பொருட்கள்(Apps) அனைத்தையும் மற்றொரு உலவியில் உலகில் வேறு எங்கு இருந்தும் ஓபன் செய்து கொள்ளளாம். 
 • உங்களின் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்கள் அனைத்தையும் இன்னொரு இடத்தில இருந்தும் உபயோகிக்கலாம். 
 • குரோம் தீம்கள், மொழி அமைப்புகள்(Settings), டவுன்லோட் பகுதிகள் என எதுவும் மாறாமல் அப்படியே இருக்கும். 
 • புதிய குரோம் வெர்சனில் v19 ஒரு இடத்தில திறந்து வைத்துள்ள டேப்களை அப்படியே மற்றொரு இடத்திலும் பார்க்க முடியும். 
மற்றும் ஏராளமான வசதிகள் இந்த Sign into Chrome வசதியில் உள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்த்து இதன் பயன்பாட்டை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

Sign in to Chrome பயன்படுத்துவது எப்படி: 

முதலில் உங்கள் கணினியில் உள்ள குரோம் உலவியை ஓபன் செய்து மேலே உள்ள ஸ்பேனர் ஐகானை க்ளிக் செய்யவும். அதில் Sign in to Chrome என்ற லிங்கை அழுத்தவும்.

 • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஒப்னாகி உங்களின் கூகுல் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும். சரியாக கொடுத்து Sign in பட்டனை அழுத்தவும். 
 • அடுத்து Enter your application specific password கேட்கும். அதனை உருவாக்க தெரிந்தவர்கள் ஒரு புதிய பாஸ்வேர்டை உருவாக்கி கொத்து உள்ளே நுழைந்து கொள்ளவும். 
 • தெரியாதவர்கள் இந்த லிங்கில் சென்று Authorizing applications & sites page இந்த லிங்கில் சென்று மறுபடியும் உங்களுடைய பாஸ்வேர்டை கொடுத்து Verify பட்டனை அழுத்தவும். 
 • கீழே Application specific password என்ற இடத்திற்கு செல்லவும்.
 •  Name பகுதியில் ஏதேனும் கொடுத்து Generate Password என்ற பட்டனை அழுத்தினால் ஒரு பாஸ்வேர்ட் வந்திருக்கும் அதை காப்பி செய்து கொள்ளுங்கள்.
 • நீங்கள் காப்பி செய்த பாஸ்வேர்டை முன்பு ஓபன் செய்த application specific password பகுதியில் கொடுக்கவும்.

 • Sign in பட்டனை அழுத்தினால் உள்ளே நுழைந்து இந்த வசதி வேலை செய்ய ஆரம்பித்து விடும். வேறொரு கணினியில் இதே ஐடியில் உள்ளே நுழைந்தால் இதில் உள்ள அனைத்து விவரங்களையும் மற்ற கணினியிலும் பார்த்து கொள்ளலாம்.
இந்த வசதியை பொது கணினிகளில் ஆக்டிவேட் செய்ய வேண்டாம். மறந்து ஆக்டிவேட் செய்து விட்டால் Sign in Chrome பகுதிக்கு சென்று இந்த வசதியை Disconnect செய்து விடவும். மேலும்  பதிவில் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே கமென்ட் பகுதியில் தெரியப்படுத்தவும்.

Comments