குரோம் உலவியில் ஓபன் செய்து வலது ஓரத்தில் உள்ள ஸ்பேனர் போன்ற ஐகானை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள About Google Chrome என்பதை கிளிக் செய்யவும்.
About Google Chrome என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி குரோமின் புதிய வெர்சன் தானாகவே இன்ஸ்டால் ஆக தொடங்கும். ஒரு சில நிமிடங்களில் உங்கள் குரோம் உலவி அப்டேட் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Relaunch என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் குரோம் உலவி reload புதிய வெர்சன் அப்டேட் ஆகிவிடும். இதை உறுதி செய்ய மறுபடியும் About Google Chrome பகுதிக்கு சென்றால் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இது போன்று சுலபமாக உங்களின் குரோம் இணைய உலவியை அப்டேட் செய்து கொள்ளலாம்.
இந்த முறை பல பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாத சில நண்பர்களுக்காக இந்த பதிவு.
Comments