யூடியுப் தளத்தை புதிய தோற்றத்திற்கு மாற்ற

மிகப்பெரிய வீடியோ பகிரும் தளமான யூடியுப் தளம் தற்பொழுது புதிய தோற்றத்தை வெளியிட உள்ளது. இந்த புதிய தோற்றத்தை படிப்படியாக அனைவருக்கும் வழங்க இருக்கிறது. இந்த புதிய யூடியுப் தோற்றத்தை ஒரு சில அதிஷ்ட சாலிகள் மட்டுமே இப்பொழுது பெற்றுள்ளனர்.உங்களுக்கு இந்த புதிய தோற்றம் இன்னும் கிடைக்கவில்லையா?  யூடியுப் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டியதில்லை உங்கள் பிரவுசரில் ஒரு சிறிய மாற்றம் செய்தால் போதும் இப்பொழுதே அந்த புதிய தோற்றத்தை நீங்களும் பெறலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


இதற்க்கு முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள். உங்கள் பிரவுசரை பொருது கீழே உள்ள ஷார்ட்கட் கீயை அழுத்துங்கள். உங்களுக்கு Web Console பக்கம் ஓபன் ஆகும்.

                                 Google Chrome - CTRL + SHIFT + J

                                 Internet Explorer -F12

                                 Mozilla Firefox - CTRL + SHIFT + K

                                 Opera - CTRL + SHIFT + I


அடுத்து கீழே உள்ள வரியை காப்பி செய்து Console பகுதியில் பேஸ்ட் செய்து உங்கள் கீபோர்டில் Enter கீயை அழுத்துங்கள். உதவிக்கு கீழே உள்ள ஸ்க்ரீன்ஷாட்களை பார்த்து கொள்ளுங்கள்.

document.cookie="VISITOR_INFO1_LIVE=nH7tBenIlCs";

Chrome Screen Shot

Firefox Screen shot


என்டர் பட்டனை அழுத்தியவுடன் யூடியுப் தளத்தை மூடிவிட்டு மறுபடியும் திறக்கவும். இப்பொழுது உங்கள் யூடியுப் தோற்றம் மாறியிருப்பதை காணலாம். 


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments