பாமினி எழுத்துருவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கணினியில் டைப் செய்ய பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் எழுத்துரு(font). தமிழ் உபயோகப்படுத்தப்படும் கணினியில் நிச்சயம் இந்த எழுத்துரு(font) இருக்கும். நம் கணினியில் உள்ள பெரும்பாலான மென்பொருட்கள் இந்த எழுத்துருவை சப்போர்ட் செய்வதால் பெரும்பாலனவர்கள் இதை உபயோகிக்கிறோம். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் இந்த எழுத்துருவை உபயோகிக்க நமக்கு தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதிகமான பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த எழுத்துருவை பயன்படுத்தி தமிழில் டைப் செய்ய முடியும்.இல்லையேல் பயன்படுத்துவது மிகவும் சிரமம். மற்றும் இணையத்தில் தமிழில் எழுத இந்த எழுத்துருவை பயன்படுத்த முடியாது. அதற்க்கு பாமினி எழுத்துருவை யுனிகோடாக மாற்றினால் தான் பயன்படுத்த முடியும்.
உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளை கணினிகளில் உபயோகபடுத்த பொதுவாக உருவாக்காப்பட்ட குறியீட்டு முறையாகும். உலகில் உள்ள எல்லா இயங்குதளங்களும் மற்றும் இணையத்திலும் இந்த முறையை பயன்படுத்தி நமக்கு தேவையான மொழியில் டைப் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் இந்த குறீட்டை பயன்படுத்தலாம். இது பயன்படுத்தவும் மிகவும் சுலபம் "vanakkam" என டைப் செய்தால் "வணக்கம்" என்று வந்துவிடும் ஆகவே இதை உபயோகிக்க டைப்பிங் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை உள்ளது நம் கணினியில் உள்ள சில மென்பொருட்களில் இந்த யுனிகோட் முறையை ஏற்று கொள்ளாது. அப்பொழுது யூனிகோட் எழுத்துருவை பாமினியாக மாற்றினால் தான் நம்மால் அந்த மென்பொருளில் தமிழை உபயோகிக்க முடியும்.
ஆகவே மேலே உள்ள இரண்டு முறைகளிலும் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நமக்கு பயன்படுவது தான் இந்த NHM CONVERTER. இந்த மென்பொருளின் துணையுடன் நாம் பாமினியில் இருந்து யுனிகோடிற்கும் யுனிகோடில் இருந்து பாமினிக்கும் நம்முடைய தகவல்களை சுலபமாக மாற்றி கொள்ளலாம். இந்த மென்பொருளில் மேலும் பல வகை எழுத்துருக்களையும் மாற்றி கொள்ளலாம்.
- இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- அதில் உள்ள இடத்தில் உங்கள் தகவலை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள். அது தானாகவே உங்களுடைய எழுத்துரு வகையை தேர்வு செய்து கொள்ளும். தானாக தேர்வு செய்ய வில்லை எனில் நீங்களே தேர்வு செய்து விடுங்கள்.
- இரண்டாவது கட்டத்தில் நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய எழுத்து முறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து அருகில் உள்ள கன்வெர்ட் பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய எழுத்துரு வகை மாற்ற பட்டுவிடும். இனி உங்களுக்கு தேவையான இடத்தில் தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.
Download - NHM Convertor
டுடே லொள்ளு
பார்த்துகிட்டே இருந்தா எப்படி நீங்களும் கூட சேர்ந்து தட்டுங்க ஹீ ஹீ
******
Check - How to change google menu bar color
******
Check - How to change google menu bar color
Comments