போர்ட்டபிள் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய - Portable Apps

இணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்டண மென்பொருட்களும் குவிந்து உள்ளன. இந்த மென்பொருட்களை தரவிறக்கி நம் கணினியில் இன்ஸ்டால் செய்து பின்னர் அந்த மென்பொருளின் பயனை உபயோகப்படுத்துகிறோம் அல்லது போர்ட்டபிள் மேன்போருட்கலாக உபயோகப்படுதுகிறோம். போர்ட்டபிள் வகை மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உகயோகிக்கலாம். மற்றும் நம்முடைய பெண்ட்ரைவில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். இந்த வகை மென்பொருட்களால் நம் கணினியில் மால்வேர் பிரச்சினை மற்றும் registry சுத்தமாக இருக்கும்.

போர்ட்டபிள் மென்பொருட்களை டவுன்லோட் செய்வதற்கே ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்த தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்களுக்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் உள்ளன.


இந்த தளத்தில் கீழே உள்ள பல்வேறு பிரிவுகளில் மென்பொருட்கள் உள்ளன. 
  • Accessibility
  • Development
  • Education
  • Games
  • Graphics & Pictures
  • Internet
  • Music & Video
  • Office
  • Security
  • Utilities
போன்ற பிரிவுகளில் மென்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிரபலமான மென்பொருட்கள் அனைத்திற்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும்.

இந்த தளத்திற்கு செல்ல - Portable Apps

Comments