ஜிமெயிலில் பல மெயில்களை ஒரே பக்கத்தில் படிக்கும் புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய

நீங்கள் Outlook ஈமெயில் சேவையை பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு தெரியும் இந்த Preview வசதி பற்றி. ஒவ்வொரு மெயிலாக ஓபன் செய்து பார்த்து என்ன இருக்கிறது என்று பார்த்து என்று தெரிந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த புதிய வசதியின் மூலம் ஒவ்வொரு மெயிலாக ஓபன் செய்து பார்ப்பதை விட ஒரே பக்கத்தில் அனைத்து மெயில்களிலும் என்ன உள்ளது என்பதை Preview பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இது மிக சிறந்த வசதியாகும் ஒவ்வொரு மெயிலாக திறந்து பார்த்தால் செலவாகும் நேரத்தை கணிசமாக மிச்சப்படுத்தலாம். 

  • மேலே உள்ள படத்தில் பார்த்தாலே புரிந்திருக்கும் இந்த வசதியை பற்றி நமக்கு வந்துள்ள ஈமெயில்கள் ஒரு பகுதியாகும் அதை க்ளிக் செய்தால் ஓபன் ஆகும் ஈமெயில் Preview ஒரு பகுதியாகும் அடுத்த பகுதியில் People Widget தெரியும்.
ஆக்டிவேட் செய்ய 
  • இந்த லிங்கில் க்ளிக் Gmail Labs செய்யுங்கள் இந்த லிங்க் உங்கள் ஜிமெயில் Labs பகுதிக்கு அழைத்து செல்லும்.
  • அதில் உள்ள Preview pane வசதிக்கு அருகில் உள்ள Enable பட்டனை க்ளிக் செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்து விடவும்.
  • இப்பொழுது அந்த ஜிமெயில் பக்கத்தை Refresh செய்யுங்கள்.  கீழே படத்தில் காட்டியுள்ளது போல ஒரு பட்டன் காணப்படும் அதை க்ளிக் செய்யவும்.
  • இதன் மீது க்ளிக் செய்தால் போதும் ஜிமெயிலின் புதிய வசதியை நீங்களும் பெறலாம். 
  • இனி ஒவ்வொரு மெயிலாக ஓபன் செய்து பார்க்காமல் ஒரே பக்கத்தில் அனைத்து மெயில்களையும் ஓபன் செய்து படிக்கலாம். 
  • இதில் மேலும் சில வசதிகள் உள்ளது No Spilit, Vertical Split, Horizontal Split என்பதாகும்.

No Split - புதிய வசதி தேவையில்லை எனில் இதை க்ளிக் செய்தால் பழைய ஸ்டைலில் ஜிமெயில் மாறிவிடும். 

Vertical Split - நீங்கள் இந்த வசதியை ஆக்டிவேட் செய்தால் டீபால்டாக இந்த ஸ்டைலில் தான் இயங்கும். 

Horizontal Split - ஜிமெயில் ஸ்டைல் குறுக்காக பிரிக்கப்படும். 


மற்றும் இந்த Preview மூலம் பார்க்கும் ஈமெயில்களை கட்டுபடுத்த சில வசதிகளையும் வழங்கி உள்ளார்கள். 

  • Settings- General - Preview pane சென்றால் டீபால்டாக After 3 seconds என்று இருக்கும் அதாவது நாம் Preview-ல் ஏதேனும் மெயிலை பார்த்தால் 3 நொடிகளுக்கு பிறகு அந்த மெயில் படிக்கப்பட்ட ஈமெயிலாக மாறிவிடும். 
  • அதில் நேர அளவை மாற்றவேண்டுமானால் இதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

பதிவில் மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் தெரிவிக்கவும்.

நண்பர்களே நேரம் இருப்பின் இதில் உள்ள விளம்பரங்களின் மீது க்ளிக் செய்தால் மகிழ்வேன்... மிக்க நன்றி.....

Comments