உங்கள் பதிவுகள் காப்பி அடிக்கப்பட்டால் கூகுளிடம் புகார் கொடுப்பது எப்படி

இணைய உலகில் வாசகர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் பிளாக்கர் எனும் இந்த இலவச சேவை. இதன் மூலம் பல பேர் வலைப்பூக்களை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறோம். பல பேர் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்த பிளாக்கர் தளங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் சில பேர் நேரம் கிடைக்காமல் இரவில் கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தையும் செலவழித்து பதிவுகள் எழுதி வருகின்றனர். இவ்வளவு கஷ்டப்பட்டு உடலை வருத்திக்கொண்டு எழுதப்படும் பதிவுகளை ஒரு சிலர் சுலபமாக வந்து அவர்களின் தளங்களில் காப்பி செய்து போட்டு கொள்கிறார்கள். அவர்களின் சிந்தனையையும், உழைப்பையும் சுலபமாக திருடுகின்றனர். உங்கள் பதிவுகளை காப்பி செய்யாமல் தடுக்கவே முடியாது. உங்கள் பிளாக்கில் மவுசை செயலிழக்க வைப்பதால் பதிவு திருட்டை தடுக்க முடியும் என நினைத்து பல பேர் இதை ஆக்டிவேட் செய்து வைத்துள்ளனர் ஆனால் இதனால் உங்கள் பதிவுகள் திருடப்படுவதை தடுக்க முடியாது. 
பதிவுகள் காப்பி செய்யும் தவறை செய்வது பெரும்பாலும் புதிய பதிவர்கள் தான் ஏனென்றால் அவர்களுக்கு இப்படி காப்பி செய்து அவர்களின் பிளாக்கில் போடுவது தவறு என்று கூட தெரியாமல் இதை பல பேர் செய்கின்றனர். இவர்களை போன்றவர்களுக்கு நாம் தவறு என்பதை புரிய வைத்தாலே போதும் அடுத்து அந்த தவறை செய்ய மாட்டார்கள். 

ஆனால் ஒரு சிலரோ எல்லாம் தவறு என்று தெரிந்தும் காப்பி செய்து அவர்களின் தளத்தில் போட்டு கொள்கிறார்கள். நாம் கண்டித்தாலும் அவர்கள் அந்த பதிவுகளை நீக்க மறுக்கிறார்கள் அவர்களை போன்றவர்களுக்கு பாடம் புகட்டவே இந்த பதிவு.

உங்களுடைய பதிவுகளை காப்பி செய்த தளங்களை கீழே உள்ள முறைகளின் செய்து கூகுளிடம் புகாரை தெரிவியுங்கள். DMCA(Digital Millennium Copyright Act) பிரிவில் எவ்வாறு புகாரை அனுப்புவது என கீழே பார்ப்போம்.

1) இதற்க்கு முதலில் இந்த லிங்கில் Blogger Complaint about Content theft க்ளிக் செய்து இந்த தளம் செல்லுங்கள். அங்கு உங்களுக்கு ஒரு படிவம் காணப்படும் அதை கீழே உள்ள வழிமுறைகளின் படி பூர்த்தி செய்யுங்கள்.

2) உங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.

3) உங்களுடைய நிஜப்பதிவுகள் இருக்கும் URL களை இங்கே கொடுக்கவும். ஒரு வரியில் ஒரு பதிவு URL மட்டும் தான் இருக்க வேண்டும். 


4) அடுத்து உங்களின் சிறு குறிப்பினை பிளாக்கர் குழுவிற்கு தெரிவியுங்கள்.


5) அடுத்து உங்களின் பதிவுகளை காப்பி அடித்து போட்டுள்ள பிளாக்கின் பதிவு URL-களை கொடுக்கவும்.


6) அடுத்து கீழே உள்ள இரண்டு கட்டங்களில் டிக் மார்க் கொடுத்து திரும்பவும் கீழே உள்ள காலி இடத்தில் உங்கள் முழு பெயரை கொடுக்கவும். 


7) மேலே உள்ள அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்திருந்தால் கீழே உள்ள Submit என்ற பட்டனை க்ளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும். 
நீங்கள் குறைந்தது இரண்டு முதல் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். பின்பு நீங்கள் கொடுத்த ஈமெயில் முகவரிக்கு செய்தி அனுப்புவார்கள். 

எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன : 
  • முதலில் நீங்கள் புகார் கொடுத்த பதிவுகளை மட்டும் அந்த வலைப்பூவில் இருந்து Draft பகுதிக்கு மாற்றிவிடுவார்கள். அவருக்கும் அதற்க்கான எச்சரிக்கை செய்தியை கொடுப்பார்கள். 
  • இப்படியே பல புகார்கள் குறிப்பிட்ட ஒரு வலைப்பூவை பற்றி வந்து கொண்டு இருந்தால் அவர்கள் அதை பரிசோதித்து உண்மையென கண்டறிந்தால் அந்த பிளாக்கை முடக்கம் செய்து விடுவார்கள். 

Comments