
இப்பொழுது அடுத்த கட்டமாக SOPA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விக்கிபீடியா நிறுவனம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது நாளை புதன் கிழமை விக்கிபீடியா தளம் செயல் படாது என விக்கிபீடியா உரிமையாளர் ஜிம்மி வேல்ஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஒரு நாளைக்கு 25 மில்லியன் வாசகர்கள் பார்வையிடும் விக்கிபீடியா தளத்தின் ஆங்கில பதிப்பு நாளை ஒரு நாள் வேலை செய்யாது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான்.
ஏற்க்கனவே இந்த போராட்டத்தில் Reddit தளமும் 12 மணி நேரத்திற்கு முடக்கப்படும் என அந்த தளம் அறிவித்து உள்ளது. இப்பொழுது அந்த போராட்டத்தில் விக்கிபீடியா தளமும் பங்கு கொண்டுள்ளது.
விக்கிபீடியா தளம் 300 மொழிகளுக்கு மேல் சேவையை வழங்கினாலும் இந்த ஆங்கில பதிப்பு தான் உலகளவில் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஏதேனும் முக்கிய தகவலை விக்கிபீடியாவில் அறிய வேண்டுமென்றால் இன்றே பார்த்து கொள்ளுங்கள். நாளை இந்த தளம் வேலை செய்யாது.
இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Comments