காப்பி அடிப்பவர்களுக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க?



      நாம் கஷ்ட்ட பட்டு எழுதுறத ஒரு ஒரு திருட்டு பசங்க நம்மளுக்கு தெரியாம காப்பி பண்ணி பேஸ்ட் செய்து கொள்வார்கள். ஆனால் இப்ப லேட்டஸ்ட் என்னனா காப்பி செய்து கொண்டு அதற்கு நன்றியையும் தெரிவித்து விட்டு செல்கிறார்கள். அது போல் ஒரு சம்பவம் எனக்கு தற்போது தான் ஏற்பட்டது. அந்த தளத்தில் ஏறக்குறைய அனைத்துமே மற்றவர்களிடம் இருந்து திருடப்பட்டதே என்று நினைக்கிறேன். அது போல் உள்ளவர்களுக்கு எப்படி ஆப்பு அடிப்பது என்று இங்கு காணலாம்.


நம்முடைய தளம் திருடப்பட்டதா என்று கண்டறிய:
    பரந்து விரிந்த இந்த இணைய உலகில்  நாம் எழுதும் பதிவு திருடப்பட்டதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. அதற்கு தான் நம்முடைய ஆண்டவன் (கூகிள்)  இருக்கின்றாரே. எவனாலும் நம்மை ஏமாற்றலாம் ஆனால் கூகுளை ஏமாற்ற முடியாது. உங்கள் தளத்தில் திருடுபவன் பெரும்பாலும் பாப்புலர் ஆன பதிவையே திருடுவார்கள் ஆகையால் நீங்கள் உங்கள் தளத்தில் பாப்புலர் ஆன பதிவில் ஏதேனும் வரியை காப்பி செய்து கூகுளில் பேஸ்ட் செய்து தேடுங்கள். அதில் முதலில் உங்களுடைய தளம் மட்டுமே வரவேண்டும். அப்படி வேறு ஏதேனும் தளம் வந்தால் அந்த தளத்திற்கு சென்று உங்கள் பதிவு தானா என்று பார்த்து கொள்ளுங்கள். இதை எட்டு அல்லது பத்து பதிவுகளில் செய்து பாருங்கள்.


காப்பி செய்வதை எப்படி தடுப்பது :
 1. இந்த தளத்தை காப்பி செய்யாதிர்கள் என்ற Banner நம்முடைய தளத்தின் முகப்பு பக்கத்தில் தெரியுமாறு சேர்க்கலாம்.(இதெல்லாம் எவனும் மதிக்கமாட்டான் என்று கூறுவது கேட்கிறது). மதிக்கிறார்களோ இல்லையோ நம்முடைய கடமையை நாம் செய்து விடவேண்டும்.


2. Contact Details: 
     இவைகளை செய்த பிறகும் நம் தளத்தை காப்பி செய்து கொண்டிருந்தால் அவர்களின் தளத்திற்கு சென்று அவர்களுடைய CONTACT DETAILS தெரிந்து கொள்ளுங்கள். அப்படி எதுவும் அந்த தளங்களில் இல்லாமல் இருந்தால் WHOIS, ALEXA ஆகிய தளங்களுக்கு சென்று அந்த திருட்டு தளங்களின் முகவரியை கொடுத்து  CONTACT DETAILS பெற முயற்சி செய்யுங்கள்.
    அப்படி ஏதேனும் ஒரு வழியில் அந்த தளங்களின் CONTACT DETAILS தெரிந்து கொண்டால் பின் வரும் ஐந்து வழிமுறைகளை கடைபிடிக்கவும்.


1. பரிவு கடிதம் (POLITE EMAIL):
    எடுத்த எடுப்பிலேயே நம்முடைய அதிரடியை காட்டாமல் நம் தமிழர்களுக்கே உரித்தான முறையில் ஈமெயில் அனுப்பவும். (இது போல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு எழுதுகிறோம் எங்கள் உழைப்பை திருடாதீர்கள்) என்று ஒரு ஈமெயில் அனுப்பி பார்ப்போம்.
2. CEASE AND DESIST NOTICE :
     ஈமெயில் அனுப்பியும் எந்த பயனும் இல்லாமல் போனால் CEASE AND DESIST NOTICE (C&D) ஒன்றை அவருடைய ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள். இங்கு CEASE AND DESIST NOTICE உடைய நகல் ஒன்றை இணைத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து அனுப்பி விடவும்.
3. DMCA LETTER TO WEBHOST :
    இது சட்டப்படி நாம் எடுக்கும் முதல் முயற்சியாகும் . DMCA என்பது DIGITAL MILLENNIUM COPYRIGHT ACT என்பதன் சுருக்கமாகும். இந்த லெட்டரை நாம் நாம் அந்த WEBHOST அனுப்புவதன் மூலம் அந்த தளத்தை முழுவதுமாக முடக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அது அந்த WEBHOSTS கையிலேயே உள்ளது. இதை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள http://www.copyright.gov/legislation/dmca.pdf   இங்கு செல்லவும்.


4. DMCA LETTER TO GOOGLE ADSENSE : 
    நம்முடைய தளத்தில் இருந்து திருடி அவர்கள் நோகாமல் சம்பாதித்து கொண்டு இருப்பார்கள். அதை தடுக்க GOOGLE ADSENSE க்கு இந்த DMCA லெட்டரை அனுப்புவதன் மூலம் அவர்களுடைய தளங்களுக்கு கிடைக்கும் GOOGLE ADSENSE முழுவதுமாக நிறுத்தி விடலாம். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.google.com/adsense_dmca.html    இங்கு க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்.


5. FINAL STAGE : 
     இது அனைத்துமே வேலை செய்யவில்லை என்றால் கடைசியாக நாம் செய்ய வேண்டியது. அந்த திருட்டு தளங்களுக்கு வரும் வாசகர்களை தெரிந்து கொண்டு அவர்களிடம் உண்மையை விளக்கி கூறினால் நாம் அந்த திருட்டு தளங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அடியோடு குறைக்கலாம். யாரும் வரவில்லை என்றால் அவன் என்ன செய்ய போறான் கடையை மூடிவிட்டு செல்ல வேண்டியது தான்.

கஷ்ட்டமோ கஷ்டம் 
நானும் இந்த Template மாத்த பட்ட அவஸ்தை இருக்குதே அப்பப்பா ஒண்ணு புடிச்சா அதுல வசதி எதுவும் இல்லாம பழைய மாதிரியா இருக்கு, ஆனா லேட்டஸ்ட் டெம்ப்ளேட் போடலாம்னு பார்த்தா அது எதுவும் எனக்கு புடிக்காம பெரும் அவஸ்தையாய் போயிடுச்சிங்க.  ஒரு வழியா ஒரு டெம்ப்ளேட் செலக்ட் பண்ணி போட்டேன். நேத்தே பதிவு எழுதாம ஒரு மாதிரியாய் போடுசீங்க அதான் நல்லா இருக்கோ இல்லையோ ஏதோ ஒண்ணு போட்டு விடலாம் என்று இத போட்டு விட்டேன். இது எப்படி இருக்குன்னு உங்கள் கருத்துக்களில் கூறவும். இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் கூறவும்

Comments