இந்த விண்டோவில் TEMPLATE DESIGNER என்று புதியததாக ஒரு பட்டன் வந்திருப்பதை காண்பீர்கள். அதில் க்ளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
மேற்கண்ட படத்தில் நான் வட்டமிட்டு காட்டியிருப்பது MAIN MENU ஆகும். இதில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. TEMPLATE
இப்பொழுது உங்களுக்கு உங்கள் தளத்தின் TEMPLATE மாற்ற விரும்பினால் TEMPLATE என்பதனை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ளதை போல விண்டோ இருக்கும் இதில் நான்கு வகையான TEMPLATE பிரிவுகள் கொடுத்து இருப்பார்கள்.
1. SIMPLE 2.PICTURE WINDOW, 3. AWESOME INC, 4. WATER MARK.
2. BACK GROUND
மெனுவில் இரண்டாவதாக உள்ளது BACK GROUND என்ற வசதி. இந்த வசதி நம் தளத்தின் BACK GROUND படத்தை மாற்ற உதவுகிறது. இதில் முக்கியமானது நீங்கள் உங்கள் TEMPLATE மாற்றினால் மட்டுமே இந்த வசதி வேலை செய்யும். இதில் இரு பிரிவுகள் உள்ளது.
1. BACK GROUND IMAGE 2. MAIN COLOR THEME
1. BACKGROUND IMAGE என்பது நம் தளத்தின் பின்புறம் படத்தை கொண்டு வர உதவுகிறது. BACKGROUND என்பதை க்ளிக் செய்து உள்ளே சென்றால் உங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பல்வேறு படங்கள் இருக்கும் இதில் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து விண்டோவின் கீழே இடது மூலையில் கொடுத்துள்ள DONE என்பதை க்ளிக் செய்தால் உங்களுடைய தளத்திற்கு BACKGROUNDல் நீங்கள் செலக்ட் செய்த படம் வந்திருப்பதை காண்பீர்கள்.
2. MAIN COLOR THEME என்பது நம் தளத்தின் நிறங்களை செலக்ட் செய்ய உதவுகிறது.
3. LAYOUT
மெனுவில் மூன்றாவதாக LAYOUT ஆகும். இந்த வசதி நம்முடைய தளத்தில் வடிவமைப்பிற்கு உதவுகிறது. இதில் முக்கியமானது நீங்கள் உங்கள் TEMPLATE மாற்றினால் மட்டுமே இந்த வசதியும் வேலை செய்யும். இதில் மூன்று பிரிவுகள் உள்ளது .
1. BODY LAYOUT 2. FOOTER LAYOUT 3. ADJUST WIDTH
1. BODY LAYOUT : இது உங்கள் தளம் எப்படி இருக்க வேண்டும் (2column or 3column) என்பதை வடிவமைக்க உதவுகிறது. இதில் உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .
2. FOOTER LAYOUT: இந்த வசதி நம் தளத்தின் கீழே உள்ள பகுதி எப்படி இருக்க வேண்டும் என்று செலக்ட் செய்ய உதவுகிறது.
3. ADJUST WIDTH : இந்த வசதி நாம் செலக்ட் செய்த layout உடைய அளவுகளை மாற்ற உதவுகிறது. அதாவது நம்முடைய பதிவு எவ்வளவு இடத்தில் தெரிய வேண்டும் நம்முடைய சைடுபார் எந்த அளவிற்கு வர வேண்டும் என்பதை செலக்ட் செய்ய உதவுகிறது.
4. ADVANCED
இது நம் தளத்தின் எழுத்துக்கள், நிறங்கள், எழுத்தின் அளவுகள் ஆகியவை செலக்ட் செய்ய உதவுகிறது. இதில் உங்களுடைய ரசனைக்கு ஏற்ப உங்களுடைய தளத்தின் நிறங்களை மாற்றி கொள்ளலாம்.( DARK COLOR செலக்ட் செய்ய வேண்டாம் படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்). இதில் ஒவ்வொரு பிரிவாக சென்று நீங்கள் விரும்பிய வண்ணம் உங்களுடைய TEMPLATEஐ அழகு படுத்தி கொள்ளுங்கள்.
உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்தவுடன் விண்டோவின் வலது மூலையில் மேலே உள்ள APPLY TO BLOG என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் தளம் நீங்கள் விரும்பிய வண்ணம் மாறியிருக்கும்.
உண்மையாக சொல்கிறேன் இதற்க்கு முன் இது போல் நம் விருப்பதிற்கு ஏற்ப இவ்வளவு மாற்றங்களை செய்ய ஒரு நாள் அல்ல ஒரு வாரமே பத்தாது ஆனால் வெறும் பத்தே நிமிடத்தில் நம் தளத்தை அழகு படுத்தி கொள்ளலாம்.
HATS OF BLOGGER
டுடே லொள்ளு
கமெண்ட் சொல்லாதவங்கள பிடிக்கத்தான் இந்த டிடெக்டிவ் ஏஜென்ட்.
Comments